பெற்றோரே மறக்காதீங்க
நம் தமிழகத்தில் அயோடின் கலக்காத உப்புக்குத் தடை இருந்தாலும் கடல் சார்ந்த பகுதிகளில் நிறைய மக்கள் அயோடின் கலக்காத கடல் உப்பு வாங்கி பயன்படுத்துகிறார்கள். மாவுப் பொருட்களில் கலப்பதற்கு மட்டும் தூள் உப்புப் பாக்கெட் வாங்குகிறார்கள். கடல் உப்பு நல்லது என்றும் தூள் உப்பு ஆரோக்கியமானது இல்லை என்றும் நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
உண்மையில் கடல் உப்பு, தூள் உப்பு ஆகிய இரண்டுமே உடலுக்குத் தேவையில்லை. ஏனென்றால் உப்பு சுவையை மட்டுமே கூட்டுகிறது. உப்புவில் இருக்கும் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், அயர்ன் போன்ற சத்துக்கள் மற்ற உணவுகளில் நிறையவே இருக்கிறது. எனவே, இந்த சத்துக்களுக்காக உப்பு எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கடல் மாசு காரணமாக கடல் உப்பில் உடலுக்கு ஆபத்தான ஈயம், பாதரசக் கனிமங்களும் கலந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
ஒருவர் ஒரு நாளைக்கு 5 மைக்ரான் அளவுக்கு உப்பு எடுத்துக்கொள்வது மட்டுமே போதும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால், நம் நாட்டினர் தினமும் 10 முதல் 15 மைக்ரான் அளவுக்கு உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். அயோடின் கலக்காத உப்பு எடுத்துக்கொள்ளும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சாவூர் பகுதி மாணவர்களுக்கு 18% அயோடின் குறை கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட நம் தமிழகத்தில் அயோடின் உப்பு எடுத்துக்கொள்வதில் பின் தங்கியிருப்பதால் மாணவர்களுக்கு தைராய்டு, மந்தபுத்தி போன்ற பிரச்னைகள் உருவாகின்றன.
எனவே, கடல் உப்பு அல்லது கல் உப்பு என்றாலும் அயோடின் இல்லாமல் வாங்கவே செய்யாதீர்கள்