இதுவே அறிகுறிகள்
மேலதிகாரியை சந்திக்கும்போது முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். ஆனால், அவருடன் பேசும்போது அந்த விஷயம் ஞாபகமே வராமல் திரும்புவீர்கள்.
ஒரு வேலை பற்றி தீவிரமாக யோசனை செய்துகொண்டு இருப்பீர்கள். திடீரென, எதுகுறித்து சிந்தனை செய்கிறோம் என்பதையே மறந்து குழப்பம் ஏற்படும். இதுபோன்ற ஒரு நிலையை பிரெய்ன் ஃபோக் எனப்படும் மூளை மூடுபனி என்கிறது மருத்துவம். இது உடல் நலக் குறைபாடு இல்லை என்றாலும் கடுமையான மனச் சோர்வுக்கும் தன்னம்பிக்கை குறைவதற்கும் வழி வகுத்துவிடும்.
பொதுவாக அதிக வேலை, போதிய தூக்கமின்மை, நாட்பட்ட தலைவலி போன்றவை இதற்குக் காரணமாகின்றன. நீண்டகாலமாக மன அழுத்தத்தில் அவதிப்படுபவர்கள், ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் மற்றும் வைட்டமின் பி12 பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் பிரெயின் ஃபாக் ஏற்பட்டலாம்.
எனவே, இந்த பிரச்னையில் சிக்கியவர்களுக்கு முழு ஓய்வு அவசியம். நீண்ட தூக்கம் முக்கியம். அதோடு பி12 நிரம்பியுள்ள பால், முட்டை, மீன் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக பி12 குறைவாக இருக்கும்போது சோர்வு, நினைவாற்றல் குறைபாடு, கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு ஏற்படும்.
எனவே, ஏதேனும் ஒரு விஷயத்தில் கவனம் குறைதல், நினைவாற்றல் குறைபாடு, மங்கலான எண்ணங்கள், ஒரே இலக்கில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றால் பிரெயின் ஃபோக் பிரச்னையா என்று ஆரம்ப கட்டத்திலே ஆய்வு செய்யுங்கள் இதுவே பிரச்னையில் இருந்து தப்பிக்கும் வழி.