லீவு போடாத மாணவர்களுக்குப் பரிசு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 158

பொதுவாக அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் கல்லூரி சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த மாணவர்கள் உயர் கல்வியை ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்பதற்காகவும் அவரது பெற்றோர் எந்த வகையிலும் பொருளாதாரக் காரணங்களால் மாணவர்கள் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவே உயர் கல்விக்கு அதிக உதவித் தொகை ஒதுக்குவதற்கு கடுமையாகப் போராடி நிதி பெற்றார் மேயர் சைதை துரைசாமி.

அதனால் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி கற்பதற்குத் தேர்வாகும் மாநகராட்சி மாணவர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாயை 45 ஆயிரமாக உயர்த்திக் கொடுத்தார். பத்தாம் வகுப்பு  மற்றும் +2 பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடையக் காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தினார்.

அதுபோலவே 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கும், +2 வகுப்பில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆயிரத்து ஐநூறாக உயர்த்தி வழங்கப்பட்டது. தேசிய அளவில், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களில் வரும் மாநகரப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. அதோடு, தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் கபடி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, சென்னை மாநகராட்சி அளவில் போட்டிகள் நடத்தி, திறமையும் தகுதியும் உடைய மாணவர்கள் கண்டறியப்பட்டு பரிசு வழங்குவதற்கு மேயர் சைதை துரைசாமி நடவடிக்கை மேற்கொண்டார். சைதை துரைசாமி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சென்னை பள்ளிகளில் 100% வருகைப் பதிவு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்குவதற்கு மேயர் சைதை துரைசாமி ஏற்பாடு செய்தார். இப்படி . பரிசுகள் வழங்குவதன் மூலம் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்க முடியும் என்றே இந்த திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டம் மேயர் சைதை துரைசாமி எதிர்பார்த்தபடியே நல்ல பலன் கொடுத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment