என்ன செய்தார் சைதை துரைசாமி – 156
ஏழை, எளிய மக்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் கல்வியின் முக்கியத்துவம் தெரிவதில்லை. அதனாலே பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவும் போட்டு பள்ளிக்கு வரவழைத்தார்கள். இலவசப் புத்தகம், இலவச உடை, உதவித்தொகை என்று பல்வேறு உதவிகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டு வருகின்றன.
ஆனாலும், அரசு மற்றும் மாநகரப் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் இருக்கிறது, என்னென்ன உதவிகள் செய்யப்படுகிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை. எனவே, சலுகைகள், உதவிகளை மக்களுக்கு முறைப்படி தெரிவித்தாலே பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று மேயர் சைதைதுரைசாமி உறுதியாக நம்பினார்.
எனவே, கோடை விடுமுறை காலத்தில் பள்ளிகளின் தரம் மற்றும் சலுகைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகித்து, சேர்க்கை விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி திட்டம் தீட்டினார். மேலும் இந்தத் திட்டத்தை மேயர் துரைசாமியே முன்னின்று நடத்தி வழி காட்டவும் செய்தார். மேயர் சைதை துரைசாமியே கையில் நோட்டீஸ் எடுத்துக்கொண்டு வீடு, வீடாகச் சென்று பெற்றோர்களை சந்தித்துப் பேசினார். நிறைய சலுகைகள், வசதிகள் இருப்பதால் தேவையில்லாமல் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கத் தேவையில்லை என்று விவரித்தார்.
இதையடுத்து மாணவர் சேர்க்கை மளமளவென உயரத் தொடங்கியது. அதோடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் – ஆசிரியர் கழகக் கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமே மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இணைப்பு அதிகரிக்கும், குறைகள் இருந்தால் தெரிவிக்கப்பட்டு தீர்வதற்கு வழி ஏற்படும் என்பதையும் நம்பினார் மேயர் சைதை துரைசாமி. இவரது காலத்தில் தான் பள்ளிகளை பெருக்குவதற்கும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் தூய்மைப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதோடு படிப்பில் ஆர்வம் இல்லாதவர்கள், பிற மாணவர்களை படிக்க விடாமல் இடைஞ்சல் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர்களுடன் பேசி, மாணவர் நலனை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.