ஞானகுரு :
உழைத்து சம்பாதித்த பணத்தை தானம் செய்வதாக இருந்தால், நிதானமாக யோசித்துச் செயல்படுங்கள். உதவி கேட்பவர்களுக்கும் கேட்கத் தயங்குபவர்களுக்கும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இதனால் புண்ணியம் வரும், சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், தர்மம் தலை காக்கும் என்றெல்லாம் கணக்குப் போடாதீர்கள். அதேபோல், நாம் செய்தது போல் உங்களுக்குப் பிறர் உதவ வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள். கொடுப்பதில் சந்தோஷம் கிடைத்தால் கொடுங்கள் அல்லது வேண்டவே வேண்டாம்.
தானம், தர்மத்தை ஒரு போதும் கோயிலுக்கும் கடவுளுக்கும் செய்யாதீர்கள். ஏனென்றால் அது மகா பாவம். கடவுளுக்குப் பிச்சை போடும் அளவுக்கு இங்கு யாரும் உயர்ந்தவர் இல்லை.
gyaanaguru.com Changed status to publish
