Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பயத்தை எதிர்கொள்வது எப்படி? – எஸ்.சகுந்தலா, சாத்தூர்.

200 viewsSeptember 28, 2024
0
gyaanaguru.com September 28, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 28, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 28, 2024 0 Comments

ஞானகுரு : .

ஓர் அறையில்  கெட்ட வாடை வீசுகிறது என்றால், உள்ளே என்ன கிடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினால் மட்டுமே துர்வாடையை நிரந்தரமாகப் போக்க முடியும். அதைவிட்டு அறைக்குள் நறுமணத்தை திணிப்பது வீண். எனவே, பயம் ஏன் வருகிறது, எதற்காக வருகிறது என்பதை நிதானமாக யோசித்து தெளிவு அடைவது தான் அதனை எதிர்கொள்ளும் முதல் வழி.

சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயத்தைக் காட்டுகிறார்கள். மாணவனுக்கு பரிட்சையைக் கண்டும், ஆசிரியரைக் கண்டும் பயம் வரும். திறமை இல்லாத ஊழியனுக்கு உயர் அதிகாரிகளைக் கண்டு பயம் வரும். சட்டத்திற்கு புறம்பான காரியம் செய்பவருக்கு காவலர்களை கண்டாலே பயம் வரும். அதுபோல், உங்களுக்கு ஏன் பயன் வருகிறது என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அந்த பயத்தை எதிர்கொள்வது எளிது.

ஒரு சில பயம் நன்மை செய்யும். திருடர் நடமாடும் பகுதியில் இரவு நேரத்தில் தனியே செல்வதற்கு பயப்படுவதே நல்லது. எனவே எல்லா பயத்தையும் தவிர்க்கத் தேவையில்லை.

gyaanaguru.com Changed status to publish September 28, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US