ஸ்டாலினிடம் மோடி கை கட்டி பவ்யம்…?

Image

டெல்லி கலாட்டா

இன்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசினார். அது குறித்து, ‘ஒரு முதல்வராக தமிழக மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்தித்தேன். கோரிக்கைகள் குறித்து 45 நிமிடங்கள் பிரதமரிடம் பேசி உள்ளேன் இனி முடிவெடுக்க வேண்டியது கோரிக்கைகளை கேட்ட பிரதமர் மோடி தான்..’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

அதேநேரம், பிரதமருடன் ஸ்டாலின் சந்திப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு படத்தில் ஸ்டாலின் கேட்பதை மோடி கேட்டபடி கையைக்கட்டி அமர்ந்திருக்கிறார். உடனே, ‘மோடி முன்னாடி கை கட்டி குனிஞ்சு உக்கார்ந்துருந்தா அது எடப்பாடி பழனிச்சாமி. ஒரு முதலமைச்சர் முன்னாடி அந்த மோடியே கைக்கட்டி உக்கார்ந்துருந்தா அவர் தான் டா முக ஸ்டாலின்’ என்று தி.மு.க.வினர் ஃபயர் விடுகிறார்கள்.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமி இவர்களுடைய சந்திப்பு குறித்து, ‘பொது வெளியில் மத்திய அரசை எதிர்ப்பதும், தனது குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நலன்களைப் பாதுகாக்க, திரை மறைவில் ஆதரவு என்று இரட்டை வேடம் ஆடுகிறது ஸ்டாலினின் விடியா திமுக அரசு’ என்று சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

மோடியை மட்டம் தட்டி மீம்ஸ் வெளியிடும் உடன்பிறப்புகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கும் தி.மு.க. நிர்வாகிகள், ‘’எப்படியோ கடும் சிரமத்துக்கு இடையில் செந்தில் பாலாஜி வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் மோடி பவ்யம் காட்டினார் என்றெல்லாம் எழுதி மீண்டும் ஒரு முறை அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜியை மாட்டி விட்ராதீங்க… கொஞ்சம் சும்மா இருங்கப்பா’ என்று உடன்பிறப்புகளை சமாதானப்படுத்தி வருகிறார்கள்.

Leave a Comment