இரண்டாவது குழந்தைக்கு எத்தனை ஆண்டு இடைவெளி…?

ஞானகுரு கவுன்சிலிங்

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது என்ற முடிவு எடுத்த பிறகு, தம்பதிக்கு அடுத்து இன்னொரு முக்கியமான சந்தேகம் வரும். அதாவது, ஃபர்ஸ்ட் சைல்டுக்கும் செகேன்ட் சைல்டுக்கும் எத்தனை வருஷம் இடைவெளி தேவைன்னு தெரியாம தவிப்பாங்க.

பெத்தவங்க, மத்தவங்க ஆளுக்கு ஒண்ணு சொல்றதைக் கேட்டு எந்த ஒரு கரக்ட் டிசிசன் எடுக்க முடியாம தடுமாறுவாங்க. முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் எத்தனை வருட இடைவெளி இருப்பது நல்லதுன்னு இப்போது பார்க்கலாம்.

ஃபர்ஸ்ட் சைல்ட் பிறந்ததும் பெண்ணுக்கு இரும்புச் சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் பற்றாக்குறையா இருக்கும். இதெல்லாம் பழைய ஆரோக்கிய நிலையை அடைவதற்கு குறைஞ்சது மூணு வருஷம் ஆகும்னு உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சிருக்கு. அதனால், இரண்டு குழந்தைக்கும் மினிமம் 3 ஆண்டுகள் இடைவெளி கட்டாயம்.

முதல் குழந்தையை நல்லா வளர்ப்பதற்கும், ஸ்கூல்ல பாடம் படிக்க வைப்பதற்கும் பெற்றோரின் ஆதரவு முழு நேரமும் தேவை. பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு முடித்த பிறகு குழந்தைக்குத் தாயின் நேரடி பராமரிப்பு நேரம் குறைந்துவிடும். இப்படி பார்க்கும்போது, மினிமம் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அடுத்த குழந்தைக்கு பிளான் செய்வது நல்லது.

இரண்டாவது பிள்ளை வளர்ப்பதற்கு இன்னொரு நபர் தேவை என்றால் முதல் குழந்தைக்கு 7 வயது முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதாவது முதல் குழந்தைக்கு 7 வயது ஆகிவிட்டால், இரண்டாவது குழந்தையை வளர்க்க அம்மா, அப்பா, மூத்த பிள்ளை என்று மூன்று பேர் இருப்பார்கள்.

மூத்த பிள்ளைக்கு இரண்டாவது பிள்ளை மீது அன்பு, பொறுப்பு, அக்கறை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதோடு இரண்டு பிள்ளைக்கும் ஒரே நேரத்தில் கல்லூரிக் கட்டணம், திருமணம் போன்ற பெரிய செலவுகள் செய்யவேண்டிய அவசியமும் இருக்காது. ஆகவே, இரண்டு குழந்தைக்குமான இடைவெளி 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரை இருப்பது நல்லது.

Leave a Comment