மேரேஜ் சீக்ரெட்ஸ்
திருமணம் என்பது இரண்டு பேர் இணைந்துவாழ்வதற்கான ஒப்பந்தம். திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்பது போதாது. அந்த நபருடன் காலம் முழுவதும் சேர்ந்து வாழ முடியுமா? இன்பம், துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா என்றெல்லாம் அறிய வேண்டும்.
என்வே, திருமணம் முடிப்பதற்கு முன்பு ஒருவருக்கொருவர் கேட்டு புரிந்துகொள்ள வேண்டிய கேள்விகள் இங்கே இருக்கின்றன. ஒரே நாளில் இத்தனை கேள்விகளையும் கேட்காமல் அவ்வப்போது நேரில் சந்தித்துப் பேசி, தெளிவான பிறகே திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும்.
இதோ, அந்த கேள்விகள்
- உங்களுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான இலட்சியம் என்ன?
- திருமண வாழ்க்கையில் உங்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்ன?
- கோபம் வந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்?
- கணவன் அல்லது மனைவியிடம் எந்த விஷயத்தை எதிர்பார்ப்பீர்கள்?
- பணத்தைச் சேமிப்பதில் உங்கள் அணுகுமுறை என்ன?
- பெற்றோருக்கான பொறுப்புகளை எப்படிப் பகிர்ந்துகொள்வீர்கள்?
- தனிக்குடித்தனம் குறித்து உங்கள் கருத்து என்ன?
- குழந்தைகள் வளர்ப்பில் உங்கள் அணுகுமுறை என்ன?
- உங்கள் வாழ்க்கையில் மாற்றிக்கொள்ள விரும்பும் பழக்கம் என்ன?
- உங்களை அதிகமாகக் காயப்படுத்தும் விஷயம் என்ன?
- பிரச்சினைகள் வந்தால் பேசித் தீர்ப்பீர்களா அல்லது விலகிச் செல்வீர்களா?
- தனிப்பட்ட சுதந்திரம் குறித்து உங்கள் கருத்து என்ன?
- வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை எப்படிச் சமநிலைப்படுத்துவீர்கள்?
- வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டால் அதை எப்படிக் கையாள்வீர்கள்?
- இந்தத் திருமணத்தில் உங்களுக்கு ஏதேனும் தயக்கங்கள் அல்லது பயங்கள் இருக்கின்றனவா?
இந்தக் கேள்விகளுக்கு ஒருவர் சொல்லும் பதில்களை மட்டும் கவனிக்காதீர்கள். அந்தப் பதில்களைச் சொல்லும்போது வெளிப்படும் நேர்மை, பொறுமை, புரிதல் ஆகியவற்றையும் கவனியுங்கள்.
அழகு, பணம், வேலை, வீடு போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் இதில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
