• Home
  • மனம்
  • ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 8 சிம்பிள் ஸ்டெப்ஸ்

ஆரோக்கியத்தைப் பாதுகாக்க 8 சிம்பிள் ஸ்டெப்ஸ்

Image

இன்று உலக சுகாதார நாள்

மனிதர்களின் வாழ்க்கை முறை ஆரோக்கியமாகத் திகழ்வதற்கு மருத்துவ விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் உலக சுகாதார தினம் ஆண்டு தோறும் ஏப்ரல் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்யும் மருத்துவத் துறை மாற்றங்கள், ஆய்வுகளில் போதிய விழிப்புணர்வூட்டும் நாள் இன்று. உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை 1948 முதல் கடைப்பிடித்து வருகிறது.

மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் புதிய மருந்துகள் மற்றும் சுகாதார வசதிகளை அனைவரும் பெறுவதற்கும் இந்த தினம் உதவி செய்கிறது. ஒவ்வொரு நபரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இன்றைய நாளின் நோக்கம்.

நோய் தடுப்பிலும், வருமுன் காப்பதிலும் விழிப்புணர்வுகளை மேற்கொள்வதோடு நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளித்து, அவர்களை பராமரிப்பதையும் இந்த நாள் வரவேற்கிறது. அதேநேரம், மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவு, இயந்திரமயம், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், பட்டினி போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரும் சவாலாக உள்ளன.இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்தில் ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்க மொத்தமே 8 வழிகள் கடைப்பிடித்தால் போதும்.

  • எல்லோருக்கும் தெரிந்தடு என்றாலும் கடைபிடிக்காத விஷயமான ஆரோக்கிய உணவுகள். சமச்சீரான உணவு கிடைக்க வேண்டியது ரொம்பவெ அவசியம்.
  • உணவுக்கு அடுத்த இடத்தில் நீர் இருக்கிறது. தினமும் அவரவர் உடல் தேவைக்கு ஏற்ப 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம்.
  • தூக்கத்தை விட சிறந்த மருத்துவர் வேறு எதுவுமில்லை. எனவே, தினமும் அவரவர் வயதுக்கு ஏற்ப தூங்க வேண்டும். குறிப்பாக எல்லோருக்கும் 6  முதல்  மணி நேரம் கட்டாயம் தூங்கியே ஆக வேண்டும்.
  • உடலுக்கு ஏதேனும் அசைவுகள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றால் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடத்தல், உடலை அசைத்தல் போன்றவைகளுக்குப் போதிய கவனம் கொடுக்க வேண்டும்.
  • சூரிய ஒளியிலும் இயற்கையான காற்றிலும் அதிக நேரம் இருக்கலாம். எல்லா நேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பது உடலுக்குச் சிக்கலை கொண்டுவரும்.
  • சிகரெட், மது, பாக்கு போன்ற போதைப் பழக்கங்கள் எல்லாமே உடலுக்கு ஆபத்தானவை. குறைந்த அளவு எடுத்துக்கொள்வதும் பாதிப்பை உருவக்கும். எனவே, இவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும்.
  • 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றால் ஆண்டுக்கு ஒரு முறையும் அதன் பிறகு ஆண்டுக்கு இரு முறையும் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதுவே, வருமுன் காப்பதற்குக் கை கொடுக்கிறது.
  • இன்றைய வாழ்க்கை எல்லோருக்கும் ஏதேனும் வகையில் ஸ்ட்ரெஸ் கொண்டுவருகிறது. இதனை குறைத்துக்கொண்டு எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் கவனித்தால் போதும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Leave a Comment