உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள்

Image

சினிமா என்பது 3 மணி நேர சொர்க்கம்.

விஞ்ஞானப் புரட்சியினால் எத்தனையோ கலைகள் அழிந்து காணாமல் போய்விட்டன. எத்தனையோ மாற்றங்களை சந்தித்த பிறகும் மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரும் கலைகளில் முதல் இடத்தில் சினிமா இருக்கிறது.

சொந்த வாழ்க்கையின் சுக, துக்கங்களை மறந்து வேறு ஓர் உலகத்தில் மனிதரை சஞ்சரிக்கச் செய்யும் சூட்சுமம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. நகைச்சுவை படத்தைப் பார்க்கும்போது குலுங்கிச் சிரிக்கிறான். சோகத்தில் கண் கலங்குகிறான். பழி வாங்கும் படங்களில் ரசிகனுக்கும் ரத்தம் சூடேறுகிறது. சினிமாவில் தானும் ஒரு பாத்திரமாகவே ஒன்றிப் போகிறான். அதனாலே உலகம் முழுக்க மனிதர்களை ஒன்றிணைக்க சினிமாவால் முடிகிறது.

உலகின் அத்தனை மொழி மக்களாலும் ரசித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 திரைப்படங்களை சிலாகித்து எழுதியிருக்கிறார் எம்.நிர்மல். சினிமாவை காதலிக்கும் ஒவ்வொரு நபரும் இந்தப் படங்களைத் தவறவிடக் கூடாது என்பதே ஆசிரியரின் விருப்பம். பட்டியலில் உள்ள திரைப்படங்களின் சிறப்புகளைப் படியுங்கள். அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து ரசியுங்கள். நண்பர்களுக்கு இந்த புத்தகத்தையும் சினிமாக்களையும் பரிந்துரை செய்யுங்கள்.

இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதற்கே படைக்கப்பட்டுள்ளது என்பதை நம்புங்கள். குறைந்த செலவில் அதிக மகிழ்ச்சி தரும் சினிமாவைக் கொண்டாடுவோம்.

80725 89355 என்ற  செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்பிவையுங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.

ஆசிரியர் : எம்.நிர்மல்

பதிப்பகம் : ஞானகுரு பதிப்பகம்

பக்கம்    : 440

விலை   : ரூபாய் 600

Leave a Comment