பிரேமலதாவுக்காக 3 கி.மீ. நடந்தாரா ஸ்டாலின்?

Image

கருணாநிதிக்கு நாணயம் வெளியீடு

’முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை… அவருக்கு கை நடுங்குகிறது, நடக்கமுடியவில்லை” என்று பிரேமலதா நேரடியாக பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது தி.மு.க.வில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஆனால், தன்னுடைய உடல் நிலை எத்தனை தூரம் ஃபிட் ஆக இருக்கிறது என்பதை இன்று அத்தனை கோடி மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் நடந்து காட்டி நிரூபித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதி சிலையில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை கிட்டத்தட்ட 3 கி.மீ. நடந்தே சென்றுள்ளார். எதிர்க் கட்சிகள் அத்தனை பேருக்கும் சேர்த்தே இந்த பதிலடி கொடுத்திருக்கிறார். அதற்காகவே எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கருணாநிதி நினைவு தினத்தில் அமைதி ஊர்வலம் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியீடு சென்னையில் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற உள்ள விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உடல்நிலை வதந்தி முறியடிக்கப்பட்டிருப்பதால், வரும் 27ம் தேதி அமெரிக்கா போவது குறித்து மீண்டும் வதந்தி எதுவும் கிளப்ப முடியாத அளவுக்கு திட்டமிட்டு செயலாற்றி இருக்கிறார் ஸ்டாலின்.

Leave a Comment