என்ன செய்தார் சைதை துரைசாமி – 370
சென்னை மாநகரை அழகூட்டுவதற்கு கூவம் நதியை சீரமைப்பதற்கும் பல்வேறு துறைகளும் இணைந்து செயலாற்றும் வகையில் மிகவும் சிறப்பாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எல்லாம் மேயர் சைதை துரைசாமியின் மேற்பார்வையில் நடைபெற்றது. எனவே, ஒவ்வொரு துறையின் சார்பில் கூவம் சீரமைப்புக்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எடுத்துரைத்தார் மேயர் சைதை துரைசாமி.
சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் வகுக்கப்பட்டன. பொதுப் பணித் துறை கூவம் நதியின் முகத்துவாரத்தில் நதியை ஆழப்படுத்தும் பணி, அடுத்ததாக கூவம் நதியில் உள்ள சில்ட் மண் அகற்றும் பணியும், அப்படி அகற்றப்பட்ட மண் குறிப்பிட்ட இடத்தில் கொட்டும் பணியும் வரையறுக்கப்பட்டது.
இதையடுத்த பணியாக நதியை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல் என திட்டமிடப்பட்டது. இதற்காக நதியின் மையப்பகுதியில் சிறிய துளை கால்வாய் அமைக்கும் பணி, நதியின் இரு கரையோரங்களிலும் பண்ட் அமைக்கும் பணி, நதியின் இரு கரைகளையும் நிர்ணயம் செய்து, கரையின் ஓரம் பவுண்டரி கல் எனப்படும் (எல்லைக் கல்) அமைக்கும் பணி வரையறுக்கப்பட்டன. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்படாத பகுதிகளில், குடிசைப் பகுதி மக்களின் கணக்கெடுப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடம் அமைக்கும் பணியும் திட்டமிடப்பட்டன.
இந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூவம் நதியின் இரு பக்கமும் கொட்டப்பட்டு கிடக்கும் கட்டிடக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகள் அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டது. அதோடு, கூவம் நதியின் இரு கரைகளின் எல்லையிலும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, கூவம் நதியில் குறிப்பிட்ட இடங்களில் பூம் சிஸ்டம், நதியில் வரும் ஆகாய தாமரை மற்றம் இதர மிதக்கும் குப்பைகளைச் சேகரித்து அவ்விடத்திலேயே அகற்றும் பணி, கூவம் நதியின் கரையோரம், பூங்கா அமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி, மிதி வண்டி தடம்அமைக்கும் பணி, பூங்காக்களில் செடிகள் அமைக்கும் பணி என மொத்தம் 24 பணிகள் ஒதுக்கப்பட்டன.
- நாளை பார்க்கலாம்.