• Home
  • யாக்கை
  • சீனியர் சிட்டிசன்களுக்கு 20 கட்டளைகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு 20 கட்டளைகள்

Image

முதுமை காரணமாக பல உடல் நலக் குறைகளை சந்திக்க வேண்டிவரும். இவற்றில் எலும்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இதுவே நடமாட்டத்தைக் குறைப்பதுடன் மற்றவர்களுக்கு சுமையாகவும் மாற்றிவிடும். எலும்புகளைப் பாதுகாக்க இந்த 20 முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள்.

  1. எந்தக் காரணத்துக்காகவும் ஸ்டூல், டேபிள், சேர் மீது ஏறி எதையாவது எடுப்பதற்கு முயலக்கூடாது.
  2. மழை பெய்யும் நேரத்தில் என்ன காரணத்துக்காகவும் வெளியே செல்ல வேண்டாம்.
  3. டாய்லட்டில் அமரும்போதும், குளிக்கும் நேரத்தில் கைப்பிடியை பிடித்து அமரவும், எழவும் வேண்டும்.
  4. பாத்ரூமில் வைத்து ஜட்டி, அண்டர்வேர் போன்ற உள்ளாடை அணிய வேண்டாம். நிறைய பேர் இதற்காக ஒரு காலை தூக்கும் நேரத்திலே கீழே விழுந்து எலும்பை உடைக்கிறார்கள்.
  5. அறையில் வந்து உள்ளாடை போடும் நேரத்தில் நின்றபடி போட வேண்டாம். ஸ்டூல் அல்லது கட்டிலில் அமர்ந்து உள்ளாடை போடுங்கள்.
  6. வீடு கழுவப்பட்டிருக்கும் சமயத்தில் நடமாட வேண்டாம். தண்ணீர், எண்ணெய் தரையில் இருப்பது தெரிந்தால் உடனடியாக நடமாட்டத்தை நிறுத்திவிடுங்கள்.  
  7. படுக்கையில் இருந்து எழுந்தவுடன் எழுந்து நிற்கவோ நடக்கவோ வேண்டாம். சில நொடிகள் எழுந்து அமர்ந்து, உட்கார்ந்து, அதன் பிறகு சில நொடிகள் கட்டிலைப் பிடித்து எழுந்து நின்று, அதன் பிறகே நடக்க வேண்டும்.
  8. இரவு விளக்கு கொஞ்சம் பிரகாசமாக இருக்கட்டும். இருட்டில் நடமாடுவதை முழுமையாக நிறுத்திவிடுங்கள்.
  9. தினமும் அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். கஷ்டப்பட்டு மாடியேறுவது, மலையேறுவது வேண்டவே வேண்டாம்.
  10. வாக்கிங் செல்லும்போது உடலுக்குக் கொஞ்சம் வெயில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி தேவையை அது பூர்த்திசெய்யும்.
  11. நிறைய உணவு எடுத்துக்கொண்டு உடல் குண்டாகக் கூடாது. பாதி வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். உடல் பருமன் அதிகரிப்பது கீழே விழும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  12. எலும்பு வலிமையை பாதுகாக்கும் பால், சோயா, வாழைப்பழம் போன்றவைகளை எடுத்துக்கொள்ளுங்கள். டானிக், வைட்டமின் மாத்திரைகளை விட இவையே போதுமானது.
  13. நீண்ட நேரம் நிற்பது, நின்றுகொண்டு பயணிப்பது வேண்டாம். இரு சக்கர வாகனம் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம்.  
  14. மருந்து, மாத்திரைகளை மறக்காமல் போடுங்கள். ஒரே மாத்திரையை மீண்டும் போடும் குழப்பம் வராத வகையில் மருந்து சாப்பிடும் பழக்கம் இருக்க வேண்டும்.
  15. மனதுக்குப் பிடித்த வகையில் பொழுதைப் போக்குங்கள். குடும்பத்தின் பொருளாதாரம், அடுத்தகட்ட நகர்வுகளில் ஆலோசனை கூறுவது வேண்டாம். எல்லாவற்றையும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் வாழுங்கள்.
  16. சின்னச்சின்ன அசெளகரியங்கள் உடலில் இருக்கும். அவை எல்லாவற்றுக்கும் மருத்துவம் தேவையில்லை. சில வழிகளை, அசெளகரியங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். தூக்கம் குறைவு, அதிக தூக்கம், ஜீரணம் போன்றவை குறித்து ரொம்பவும் அலட்டிக்கொள்ள வேண்டாம்.
  17. யாருடனும் எதற்காகவும் கோபம் கொள்ளாதீர்கள். அது, உடல் நலனை அதிகம் பாதித்துவிடும்.
  18. பழைய நண்பர்கள், உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். எப்போதும் எல்லோரிடமும் முக மலர்ச்சியுடன் பேசுங்கள்.
  19. 70 வயதைத் தொட்டவுடன் உயில் எழுதிவிடுங்கள். தேவைப்பட்டால் பின்னர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
  20. ஒருவேளை கீழே விழ நேர்கிறது என்றால் கைகள் அல்லது தோள்பட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள். முகம், இடுப்பு பகுதியில் அடிபடுவதை விட கை, தோள்களில் இருந்து விரைந்து குணமடையலாம்.

Leave a Comment