பணமே மந்திரம்
சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அதனால் தான் அதிக வட்டி, இரட்டை லாபம் என்று யாராவது கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் பேசினாலே, பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிடுகிறார்கள். பணம் பற்றிய 10 ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் அதனை சம்பாதிப்பதும் பாதுகாப்பதும் எளிதாக இருக்கும்.
- நடுத்தர வர்க்கத்தினர் திருமணத்திற்கும், வீடு கட்டுவதற்கும் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்துவிடுகிறார்கள். இதனாலே அவர்களால் பணக்காரராக முடிவதில்லை.
- ஒரே ஒரு மருத்துவச்செலவு ஒட்டுமொத்த சேமிப்பையும் விழுங்கிவிடும். எனவே, மருத்துவ பாலிசி எடுப்பதை செலவாக பார்க்கவே கூடாது.
- ஒரே ஒரு வருமானத்தை வைத்து யாரும் பணக்காரராக முடியாது. எனவே, பணம் வருவதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகளை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- வங்கியில் கிரிடிட் கார்டு, தனிநபர் கடன் வாங்காதீர்கள். இவை உங்களை வங்கிக்கு அடிமையாக்கிவிடும். அதேநேரம், வங்கியில் தொழிலுக்குக் கடன் வாங்குங்கள். இப்போது வங்கி உங்களுக்கு அடிமையாக இருக்கும்.
- எதிர்பாராமல் வரும் புதிய வருமானத்தை செலவழிக்காதீர்கள். தனியே எடுத்து நீண்ட கால முதலீட்டில் சேமித்துவையுங்கள்.
- லாக்கரில் பாதுகாப்பது, தலையணைக்கு அடியில் ஒளித்துவைப்பது பணத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். எனவே, ஏதேனும் ஒரு முதலீட்டில் போட்டு வையுங்கள்.
- திடீர் செலவுகளுக்கு தனியே பணம் அவசியம், இந்த பணம் மட்டுமே வங்கிக் கணக்கில் இருக்கலாம்.
- எந்த வகையில் பணம் கரைகிறது என்பதைக் கண்டறிய செலவுக் கணக்கு மிகமிக முக்கியம். எனவே கணக்கு எழுத மறக்காதீர்கள்.
- எவ்வளவு அதிகம் பணம் சம்பாதிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு பிரச்னைகளும் அதிகமாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்..
- பணம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பது உண்மை. அதேநேரம், மகிழ்ச்சிக்காக பணம் செலவழிக்கத் தயங்காதீர்கள்.
முதுமையிலும் உங்களிடமே பணம் இருக்கட்டும். எந்த காரணம் கொண்டும் பணத்தை எல்லாம் பிள்ளைகளிடம் கொடுத்துவிடாதீர்கள். பணம் இருக்கும் வரையிலே மதிப்பு இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள்.
