Publications

நெருப்பூ – எஸ்.கே.முருகன்

அன்பாக இருந்து விஷமாக மாறிய இதிகாச நாயகி அம்பை.
அந்தப்புரத்தில் அடிமையாக மட்டுமே பெண் இருக்க முடியும் என்ற ஆண்களின் அதிகாரத்தை உடைத்தவள் அம்பை.
வித்தியாசமான நடையில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புனைவுப் புதினம்.

370 பக்கம் : Rs. 250

இன்று முதல் ஹேப்பி – எஸ்.கே.முருகன்

நோய் அச்சம் தீர்க்கும் புத்தகம்
மனசு பாதி, மருந்து பாதி என்பார்கள். நோய் பாதிப்புகளில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. எனவே, நோய் வரும் நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன்பு நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். இதற்கு வழி காட்டுகிறார் மனவள ஆலோசகர் எஸ்.கே.முருகன்.
152 பக்கம் : விலை : Rs. 250

மாவீரர் செளந்திரபாண்டியனார் வாழ்க்கை சரிதம் – எஸ்.கே.முருகன்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இரும்புத் தலைவர்
அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்திற்கு உரமும், ஊக்கமும் கொடுத்த செளந்திரபாண்டியனாரின் வாழ்க்கையின் சுருக்கமான புத்தகம். ஒரு தனி மனிதரின் வரலாறு மட்டுமின்றி ஒரு சமூகத்தின் சரித்திரமும் இவருக்குள் அடங்கியிருக்கிறது.
64 பக்கம் : விலை Rs. 100

தலையணை மந்திரம் – எஸ்.கே.முருகன்

ஆதர்ச தம்பதியராக வாழ்வதற்கான வழிகாட்டி
ஒரே ஒரு நபருடன் விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்த முடியாதவர்களால், இந்த உலகத்தில் வேறு எந்த ஒரு வெற்றியும் அத்தனை சுலபத்தில் அடைந்துவிட முடியாது. நல்ல தம்பதியருக்கான வழிகாட்டுதல்கள். திருமணம் முடித்தவர்களும், முடிக்கப் போகிறவர்களுக்கும் உதவக்கூடிய வழிகாட்டி.
154 பக்கம் : 154 : விலை : Rs. 200

உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல்

சினிமா பிரியர்களுக்கான புத்தகம்
சினிமா என்பது மூன்று மணி நேர சொர்க்கம். நாடு, இனம், மொழி, மதம், ஜாதி என அத்தனை எல்லைக்கோடுகளையும் கடந்து ஒட்டுமொத்த உலக மக்களையும் கவர்ந்த அட்டகாசமான 75 திரைப்படங்களைத் தேர்வு செய்து பார்க்கத் தூண்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தப் படங்களை எல்லாம் பார்க்காம விட்றாதீங்க.

440 பக்கம் – விலை ரூ.600

ஆத்மலோகம் – எஸ்.கே.முருகன்

மரணத்துடன் ஒரு கோர விளையாட்டு
துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பூமியிலும் ஆத்மலோகத்திலும் சஞ்சரிக்கிறது. சிறுவனின் ஆவியை பணயக் கைதி போன்று வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஆக்கிரமிக்க முயலும் கொடூர ஆத்மாவின் கதை.
204 பக்கம் : விலை Rs. 250