கேள்வி : ஞானகுருவின் அடையாளமும் ஆசையும் என்ன..? – டி.கண்ணன், பாண்டிச்சேரி
ஞானகுரு :
ஆரோக்கிய உடல், தெளிவான மனம், போதிய பணம், ஆறுதலான உறவுகள், நிலையான மகிழ்ச்சி ஒவ்வொரு மனிதருக்கும் கிடைப்பதற்கான அடையாளமே ஞானகுரு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற கனியன் பூங்குன்றனார் தொடங்கி புத்தன், இயேசு, நபி, கிருஷ்ணன், சித்தர்கள், ஜே.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அத்தனை பேர் சிந்தனைகளையும் ஒருசேர அறிமுகம் செய்யும் முயற்சி. ஒவ்வொரு நபரும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்ப வேண்டும். பதிலும் பெற வேண்டும்.
gyaanaguru.com Changed status to publish July 1, 2024