கேள்வி : பூண்டு, வெங்காயமே சாப்பிடாத எங்களுக்கு லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலந்து கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள். இது நம்பிக்கைத் துரோகம் இல்லையா..? – சி.சிவராமகிருஷ்ணன், சென்னை.
ஞானகுரு :
இவை எல்லாவற்றையும் திருப்பதி வெங்கடாஜலபதி பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார் என்றால், அவருக்கும் இது இஷ்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், உங்களுடைய சைவ விரதம் கலைந்துவிட்டது என்றோ. தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்றோ பதற வேண்டிய அவசியம் இல்லை. இந்து வேதத்தில் எல்லாவற்றுக்கும் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது. பசு கோமியம் எடுத்து சில துளிகள் வாயில் விட்டுக்கொண்டு, கோவிந்த பஜனை பாடினால் போதும். தெரிந்தும், தெரியாமலும் செய்த எல்லா பாவங்களும் மறைந்துவிடும்.
நம்பிக்கைத் துரோகம் என்று பெரிய வார்த்தைகள் பேசாதீர்கள். கடவுள் என்பதும் ஒரு நம்பிக்கை. சைவம் என்பதும் நம்பிக்கை. இதையெல்லாம் உண்மை என்று நம்பாதீர்கள். உயிர்க்கொலை இல்லாமல் எந்தவொரு உயிரும் வாழவே முடியாது. பயிரின் உயிருக்கும் பசுவின் உயிருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பயிரின் கழுத்தை அறுத்து கதிரை அறுப்பது பாவம் இல்லை என்றால் மாட்டைக் கொல்வது மட்டும் எப்படி பாவமாக இருக்க முடியும்..? எனவே லட்டு விஷயத்தை இனிப்பாக மட்டும் பாருங்கள்.