கேள்வி : வாழ்க்கையில் ஜெயிக்க எதை விடவேண்டும்? எதைத் தொடவேண்டும்?: – பி.பட்டுமுத்து, மதுரை.
ஞானகுரு :
வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும் என்ற ஆசை இருப்பது மட்டும் போதாது. ஏனென்றால் இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஆசை இருக்கவே செய்யும். அதில் எந்த தவறும் இல்லை. நல்ல சினிமா பார்த்தால் நடிகராக ஆசை வரும். பணக்காரரைப் பார்த்தால் தொழில் செய்வதற்கு ஆசை வரும். இப்படிப்பட்ட ஆசைகளை விட்டுத்தள்ள வேண்டும். அப்படி விட்டுத்தள்ளவே முடியாத ஒரு ஆசை உங்களை இரவும் பகலுமாக விரட்டிக்கொண்டே தொந்தரவு செய்கிறதா..? அதை அடைவதற்கு எத்தனை துன்பம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று மனம் சொல்கிறதா..? அதை மட்டும் கெட்டியாகப் தொட்டுவிடுங்கள். வாழ்க்கை வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடும்.
gyaanaguru.com Changed status to publish 7 days ago