கேள்வி : பயிற்சி என்பது எத்தகைய மாறுதல்களைத் தரக்கூடியது..? – என்.ஷர்மிளா தேவி, கோவை.
ஞானகுரு :
ஆயிரம் முறை முயற்சி செய்தாலும் தோல்வி கிடைக்கலாம். அதேநேரம் முறையான பயிற்சியுடன் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் புரூஸ்லி. சும்மா உட்கார்ந்திருக்கும் நேரங்களிலும் நடக்கும்போதும் அவரது கை, காலுக்கு ஏதேனும் பயிற்சி செய்துகொண்டே இருப்பார். அந்த பயிற்சியே அவரை மின்னல் வீரனாக மாற்றியது. போதிய பயிற்சியின்றி எடுக்கப்படும் முயற்சியே தோல்விக்குத் தள்ளுகிறது. பயிற்சியும் முயற்சியும் வெற்றியின் இரண்டு கண்கள்.
gyaanaguru.com Changed status to publish July 5, 2024