கேள்வி : ஆத்மாவுக்கு அழிவே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆத்மாவைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை, புரிவதில்லை. பிறகு எப்படி அதனை மேம்படுத்துவது? – சி.ரா.செல்வராஜ், ரோசல்பட்டி.
ஞானகுரு :
தொட்டி மீனுக்கு கடலின் நீள அகலம் பற்றி எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் புரியாது. கடல் என்பதை ஒரு மிகப்பெரிய, அதைவிட பெரிய தொட்டியாகவே கற்பனை செய்ய முடியும். அதுபோல், மனிதர்களின் மூளையின் சிந்தனைக்கும் ஓர் எல்லை உண்டு. இந்த பிரபஞ்சம் தாண்டி என்னவெல்லாம் இருக்கிறது, இவையெல்லாம் எப்படி உருவானது என்பதையெல்லாம் அறிந்துகொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை.
எனவே, உங்கள் கண்களுக்குத் தெரிந்த விஷயங்களை மட்டும் பார்ப்பது போதும். ஆத்மா பற்றி அறிந்துகொள்ள சித்தர்களும், ஞானிகளும் காலம் முழுவதும் அலைந்தும், தேடியும் எதுவும் அறிந்துகொண்டதில்லை. இந்த உலகில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழப் பழகுவதே முக்கியம். ஆத்மா என்று ஒன்று இருந்தாலும் அதுவும் மகிழ்ச்சியையே எதிர்பார்க்கும்.
gyaanaguru.com Changed status to publish 6 days ago