கேள்வி : நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எப்படி கிடைக்கும் நிம்மதி? – மணி ஸ்ரீதர், விழுப்புரம்
ஞானகுரு :
பணம், அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றால் யாரும் நிம்மதியை வாங்க முடியாது. அப்படி வாங்க முடியும் என்றால் புத்தர் அரண்மனையை விட்டு வெளியே போயிருக்க மாட்டார். இந்த உலகில் கல்லும் மண்ணும் தான் நிம்மதியாக இருக்க முடியும். நீங்களும் அப்படி மாறினால் நிம்மதி கிடைக்கலாம். எனவே நிம்மதியைத் தேடாதீர்கள். தேடினால் கிடைக்காது. தேடாமலே அடைய முடியும். ஆம், உங்களிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வாருங்கள். நிம்மதிக்கான வாசல் திறந்துவிடும்.
gyaanaguru.com Changed status to publish August 18, 2024