கேள்வி : பிரச்னைகளை எதிர்கொள்வது நல்லதா… விலகிச்செல்வது நல்லதா..? – டி.பிரசன்னா, ஆவடி
ஞானகுரு :
தனியே ரோட்டில் வரும்போது நாலைந்து ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார்கள் என்றால், பர்ஸில் இருப்பதைக் கொடுத்துவிட்டு உயிர் தப்புவதே புத்திசாலித்தனம். பிரச்னையை எதிர்கொள்ள ஆசைப்பட்டு எதிர்த்து நின்றால் உயிர் போகலாம் அல்லது உடல் சேதமடையலாம். ஆகவே, எல்லா பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டாலே அதனை எதிர்கொள்வதா, வேண்டாமா எனும் முடிவுக்கு வந்துவிடலாம்.
gyaanaguru.com Changed status to publish June 30, 2024