மந்திரச்சொல்

ஞானகுரு மந்திரச் சொல்

வரிசை 6

  • கடினமாக உழைத்தும் சோர்வு தெரியவில்லையா? அதுதான் உனக்குப் பிடித்த வேலை.
  • கடவுளின் இருப்பை நாத்திகனைவிட, ஆத்திகனே அதிகம் சந்தேகப்படுகிறான்.
  • எந்த வேலைக்கு நீ முன்னுரிமை கொடுக்கிறாய் என்பதில்தான், உன்னுடைய வெற்றி இருக்கிறது.
  • தோல்வி கிடைக்குமோ என்ற எண்ணம் வந்துவிட்டால், நிச்சயம் தோல்விதான்.
  • கேள்வியே கேட்காமல் முட்டாளாக இருப்பதைவிட, கேள்வியைக் கேட்டு முட்டாள் ஆகலாம்.
  • எந்த ஒரு வெற்றியும் முடிவு அல்ல, தோல்விக்கு காத்திரு.
  • கொடுப்பதற்கு எதுவும் இல்லையா, புன்னகையைக் கொடு..
  • சண்டை போடாமல் எதிரியை வெல்வதுதான் உண்மையான போர்க்கலை.
  • வறுமையைவிட மதமே நிறைய மனிதர்களை கொலை செய்திருக்கிறது.
  • வாழ்வது ஒரு முறைதான். சந்தோஷத்தை தள்ளிப் போடாதே.
  • அதிர்ஷ்டம் என்பது உன் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *