செபி மாதபி யாருடைய சிப்பாய்..?
மோடிக்கு காங்கிரஸ் நெத்தியடிக் கேள்விகள்
நாட்டில் செபியின் பெயரைச் சொல்லி ஒரு மிகப்பெரிய சதுரங்க வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. அந்த சதுரங்க விளையாட்டின் ஒரு சிப்பாய் இன்றைய செபி தலைவர் மாதபி பூரி. அவருடைய ராஜா யார்..? அவரது சீட்டிங் வேலைகள் யாருக்காக என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பியிருக்கும் கேள்விகள் இவை தான்.
- பிரதம மந்திரியாக நீங்கள் ஒழுங்குமுறை அமைப்புகளின் தலைவர்களை நியமிக்கும்போது, அவர்களுக்கான பொருத்தமான அளவுகோள்கள் என்ன?
- SEBI தலைவரைப் பற்றிய இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அவரது நியமனத்திற்கு முன்/பின், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக்குழு முன் வெளிச்சத்திற்கு வந்ததா?
- மாதபி பூரி புச், SEBIயில் பணிபுரிந்த காலத்தில் லாபம் தரும் பதவியில் இருந்தும், ICICIயிடம் சம்பளம் வாங்குவது பிரதமருக்கு தெரியுமா?
- 4. SEBIயின் தலைவர்/முழு நேர உறுப்பினராக, ICICIக்கு எதிரான புகார்களைக் கையாள்வதுடன், ICICIயிலிருந்து வருமானம் ஈட்டுவதும் பிரதமருக்குத் தெரியுமா?
- 5. ICICIயை விட்டு வெளியேறிய பிறகும் SEBI தலைவர்/முழு நேர உறுப்பினர், பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தின் (ESOP) லாபத்தை ஏன் தொடர்ந்து பெற்றார்? இது பிரதமருக்குத் தெரியுமா?
- 6. SEBI தலைவரைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்தாலும், அவரைப் பாதுகாப்பது யார், ஏன் என்று பிரதமர் சொல்ல வேண்டும்?
என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கு பா.ஜ.க.விடம் பதில் இருக்கிறதா… மோடி வாய் திறக்க வேண்டியது அவசியம்.