அரசியல்

எடப்பாடியை கேவலப்படுத்தும் அண்ணாமலைக்கு செருப்பு மாலை

அ.தி.மு.க.வினருக்கு ஆண்மை இல்லையா?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக் குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிறகும் அ.தி.மு.க.வினர் அமைதி வழியில், ‘கருப்புக் கொடி’ போராட்டம் நடத்துவதாக கொதிக்கிறார்கள். ஜெயலலிதா காலத்தில் யாராவது ஒருவர் இப்படி பேசிவிட்டு தப்பிவிட முடியுமா என்று அ.தி.மு.க. பெருசுகள் கொதிக்கிறார்கள்.

இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி மீது பொதுக்கூட்டத்தில் கொடூரத் தாக்குதல் நடத்தினார் அண்ணாமலை. எடப்பாடி பழனிசாமி குறித்து, ‘’மோடிக்கு பிரசாரம் செய்ய அழைத்த நேரத்தில் வரமுடியாது என்று சொன்னார். அப்போதே அவர் மீது வெறுப்பு வந்துவிட்டது. இப்போது  அதிமுகவின்  எடப்பாடி பழனிசாமி அவர்கள், என்னைக் குறித்துப் பேசியிருக்கிறார். அன்றைய அமைச்சர் ஒருவரின் துணையால் கொலை வழக்கிலிருந்து தப்பித்தவர், எனக்கு நேர்மை, நியாயம் குறித்துப் பாடம் நடத்த வேண்டாம்.

புரட்சித் தலைவர் அமரர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோரின் கட்சியை, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி நடத்திய விதம், அலங்கோலம் என்பதை அவரால் மறைக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணம் கொடுத்து, காலில் விழுந்து பதவி வாங்கிய அவருக்கு, காவல்துறையில் நேர்மையாகப் பணி செய்த விவசாயியின் மகனான என்னைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?’’ சவால் விட்டுப் பேசியிருக்கிறார்.

இதற்கு அ.தி.மு.க.வினர் பலரும் எதிர்வினை ஆற்றிவருகிறார்கள். அண்ணாமலை எங்கே சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

இது குறித்து பேசும் சீனியர்கள், ‘’ஜெயலலிதா காலத்தில் யாராவது ஒரு மேடைப் பேச்சாளர் கூட கட்சியை எதிர்த்து இப்படி பேசிவிட முடியாது. விளக்கமாறு பூஜை நடக்கும். ஆனால், கட்சித் தலைவரையே இப்படி பேசிய பிறகும் அ.தி.மு.க.வினர் அமைதி காக்கிறார்கள். அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் செருப்பு வீசியிருக்க வேண்டாமா..? அண்ணாமலை படத்துக்கு செருப்பு மாலை போடுவது, உருவப்பொம்மை எரிப்பது நடந்திருக்க வேண்டாமா? அ.தி.மு.க.வுக்கு ஆண்மை இல்லை என்று குருமூர்த்தி பேசியது சரியாகத்தான் இருக்கிறது’’ என்று வேதனைப்படுகிறார்கள்.

இந்த நிலையில் தமிழிசை செளந்தர்ராஜன் மட்டும், ‘’கொஞ்சம் கண்ணியமாகப் பேசுங்க’’ என்று தடவிக் கொடுத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *