மருத்துவர்கள்

சென்னையின் வெப்பநிலை உயரப்போகுது

எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி

சென்னையில் காங்கிரீட் கட்டடங்களின்அடர்த்தி அதிகமாவதால் 2030ல் சென்னையின் வெப்பநிலை 2°C அதிகமாகும் என தமிழக சுற்றுச்சூழல் துறையால் நடத்தப்பட்ட விழாவின் போது தெரியவந்துள்ளது என்கிறார் டாக்டர் புகழேந்தி.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘’அமெரிக்காவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் -Coldwell Banker Richard Ellis நிறுவனம் செய்த ஆய்வில் சென்னையின் வீடு,வணிகம்,தொழிற்நிறுவனங்கள்,வர்த்தகம்(Retail)-இவற்றின் கட்டடங்களின் பரப்பு அதிகமாவதால்,2030ல் சென்னையில் அதன் பரப்பு அடுத்த 6 வருடங்களில் 2022ல் 246 மில்லியன் சதுரஅடி இருந்தது,2030ல் 380 மில்லியன் சதுரஅடியாக அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

Indian Institute of Human Settlements(IIHS) செய்த ஆய்வில் சென்னையின் கான்கிரீட் கட்டடங்களின் பரப்பு +அடர்த்தி அதிகமாவதால்,அதன் வெப்பநிலை 2030ல் 2°C அதிகரிக்கும் என கணித்துள்ளது.

வீடு, தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தால் (Centralized Air Conditioning) 1°C வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும்,சாலைகளின் விரிவாக்கம்+பிடுமண் (Bitumen) பயன்பாடு காரணமாக மேலும் 1°C வெப்பம் அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே நிபுணர்கள் சென்னையின் இத்தகைய சூழல் காரணமாக “வீடுகள்/கட்டடங்களுக்கான பசுமைத் திட்டம்” உடனடித் தேவை என வலியுறுத்துகின்றனர்.

கட்டடங்கள் கட்டுபவர்கள் கண்ணாடி,கான்கிரீட் பரப்புகளுக்கு பதிலாக மண் கலந்த தரை (Mud-based floor) பயன்பாட்டை அதிகப்படுத்தி வெப்ப உயர்வை கட்டுப்படுத்த முன்வர தமிழக அரசு திட்டமிடல் வேண்டும். நீர்நிலைகளை அதிகரித்தல், பசுமைப்பரப்பை அதிகப்படுத்துதல், நீர்இருப்பு பகுதிகளை (Waterfronts) அதிகப்படுத்தினால் சென்னையின் வெப்பத்தை 3°C குறைக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

IIT சென்னை-ராஜ்பவன் அருகில் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் மேற்சொன்ன காரணிகளை அதிகப்படுத்தியதால் அங்கு வெப்பம் தணிந்து காணப்படுவது பிற இடங்களிலும் பின்பற்ற முன்உதாரணமாகத் திகழவேண்டும்.

மேற்கூரைகளை சூரியவெப்ப தகடுகள் மூலம் அலங்கரிப்பதும் அரசு செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும். அது வெப்ப உயர்வை கட்டுப்படுத்தும். சென்னையில் வீடுகளின் பரப்பு 2022ல் 130 மில்லியன் சதுரஅடியாக இருந்தது,2030ல் 195 மில்லியன் சதுரஅடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னையின் 3ம் மாஸ்டர் திட்டத்தில் கட்டட அனுமதியின் போது பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டை குறைக்க திட்டங்கள் தீட்டப்படும் என CMDA செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் பிழைகளின்றி செயல்படுத்த முடியுமா என்பது கேள்வியே. அரசியல் தலையீடுகள் இருக்கும் வாய்ப்புகளே அதிகம். 

நீடித்த கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்த பசுமை-நீலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே புவிவெப்பமடைதலை(சென்னை உட்பட)கட்டுப்படுத்த முடியும்.  கொடுமை என்னவெனில் பசுமைக்குடி வாயுக்களின் வெளியீட்டிற்கு அதிக காரணமாக இருக்கும் பணக்கார வர்கத்தைக் காட்டிலும்,அதன் வெளியீட்டிற்கு குறைந்த காரணமாக இருக்கும் ஏழை வர்க்கமே புவிவெப்பமடைதல் பாதிப்பிற்கு அதிகமாக உள்ளாகின்றனர். 

நீர்நிலைகள் உள்ள (25-27% பரப்பு-1 ஏக்கர் ஈரநிலம் 81-216 மெட்ரிக் டன் கார்பனை உள்வாங்கும் திறன் கொண்டது.!)பரந்தூரில் மத்திய/மாநில அரசுகள் சென்னைக்கு அருகே விமானநிலையம் அமைக்க திட்டத்தை உறுதிபடுத்தியது சென்னயின் வெப்பத்தைக் குறைக்க துளியும் உதவாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *