சிரிப்பு

கணவர்கள் சிந்திக்க… மற்றவர்கள் சிரிக்க..!

எப்படியாவது கல்யாணம் முடிக்க வேண்டும் என்று ஆண்கள் துடிப்பதும், கல்யாணம் முடித்தவுடன் மனைவியிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க நினைப்பதும் ஆண்களின் இயல்பான குணம். சக்சஸ்ஃபுல் கணவனாக இருக்க ஆசையா.. இதோ சில வழிகள்.

* சந்தோஷமான கணவனாக இருக்க வேண்டுமா? வாயை மூடிக் கொண்டு பர்ஸை திறந்து வை.

* மிகவும் மகிழ்ச்சிகரமான திருமணம் என்பது காது கேளாதவனை, கண் தெரியாத பெண் மணந்து கொள்வதுதான்.

* வீட்டில் சண்டை இல்லாமல் இருக்க வேண்டுமானால், தவறு செய்யாவிட்டாலும் செய்ததாக ஒத்துக் கொள்.

* காதல் என்பது மிகக்கொடிய நோய். ஆனால்,  திருமணம் ஆன பிறகே அந்த நோயின் கொடுமையை அனுபவிக்க வேண்டி வரும்.

* திருமணம் ஆன முதல் வருடம் அவன் பேசுகிறான், அவள் கேட்கிறாள். அடுத்த வருடம் அவள் பேசுகிறாள், அவன் கேட்கிறான். அடுத்த வருடம் அவள் பேசுகிறாள், அக்கம்பக்கத்தவர்களும்  கேட்கிறார்கள்.

* கல்யாணம் என்பது ஹோட்டலுக்கு நண்பர்களுடன் சென்று சாப்பிடப் போவதைப் போன்றது. நீங்கள் ஆர்டர் செய்தபின்னர், அடுத்தவர் சாப்பிடுவதைப் பார்த்து, அதை ஆர்டர் செய்திருக்கலாமே என்று தோன்றுவதைப் போன்றது.

* எல்லா ஆண்களும் பிறக்கும் போது சுதந்திரமானவர்கள்தான், ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு அடிமையாகிறார்கள்.

* திருமணம் என்பது கொடுத்து வாங்குவதுதான். திருமணத்தின் போது மட்டும் அவள் கொடுக்கிறாள் அவன் வாங்குகிறான். அதற்காக வாழ்நாள் முழுவதும் அவன் கொடுக்கிறான், அவள் வாங்கிக்கொண்டே இருக்கிறாள்.

* கல்யாணமாகும் வரை சந்தோஷம் என்றால் என்னவென்று தெரியாமலே இருந்தது, ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் டூ லேட்.

* உலகிலேயே மிகச்சிறிய கை விலங்கு,  திருமண மோதிரம்.

* திருமணம் என்பது ஹோட்டலில் சாப்பிட்டால் அல்சர் வரும் என்று பயந்து பார்சல் வாங்கி வந்து வீட்டில் சாப்பிடுவதைப் போன்றது.

* மனைவியை மட்டும் விற்பனை செய்ய சட்டம் இடம் கொடுத்தால், இந்த உலகில் மிகப்பெரிய வியாபாரமாக அதுதான் இருக்கும்.

* மனைவிக்காக தாஜ்மஹால் கட்டுவதற்கு கணவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள், ஆனால் மனைவிகள்தான் விரைவில் மரணமடைவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *