அரசியல்

ஸ்டாலினிடம் விலை போனாரா விஜய்..?

பா.ஜ.க.வின் சந்தேகம்

கடந்த வாரம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய நேரத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்தும் போதைக்கும் எதிராகப் பேசிய நடிகர் விஜய், இந்த வாரம் நீட் தேர்வுக்கு எதிராக குறிப்பாக ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசியிருக்கிறார். இதையடுத்து விலை போய்விட்டார் நடிகர் விஜய் என்று பா.ஜ.க. ஆதரவாளர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

பா.ஜ.க. ஆதரவாளரான அர்ஜூன் சம்பத் இந்த விவகாரம் குறித்து, ’’கடந்த வாரம் நெற்றியில் குங்குமத்துடன் வந்தவர் இந்த வாரம் வெறும் நெற்றியுடன் இருக்கிறார். கடந்த வாரம் போதை எதிர்ப்பு இந்த வாரம் நீட் எதிர்ப்பு.

ஒரு வாரத்தில் இவ்வளவு முரண்பாடுகள் ஏன் இந்த மாற்றம்? தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது என்று சொன்னது  நடந்திருக்கிறது. அதனாலே ஜோசப் விஜய் அவர்களின் நடவடிக்கைகளின் மாற்றங்கள் முரண்பாடுகள் தென்படுகின்றன.  *வெகு விரைவில் ஜோசப் விஜய் அவர்களின் த.வெ.க. மூடு விழா நடைபெறும் என நினைக்கிறேன்.

அரசியலில் எம் ஜி ஆர் அவர்களை பார்த்து விட்டோம் அம்மையார் ஜெயலலிதா அவர்களை பார்த்து விட்டோம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்த்து விட்டோம்! நவரச நடிகர் டி. ராஜேந்தர் அவர்களை பார்த்து விட்டோம்! இயக்குனர் பாக்யராஜ் அவர்களை பார்த்து விட்டோம்! கேப்டன் விஜயகாந்த் அவர்களை பார்த்து விட்டோம்! உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை பார்த்து விட்டோம்.

இதோ தொடங்க போகிறேன் இப்போ தொடங்குகிறேன் என்று சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து விட்டோம்! இவ்வளவு பேரை பார்த்த எங்களுக்கு நீங்கலெல்லாம் சுண்டைக்காய் அரசியல் என்றால் விளையாட்டாக போச்சு! அதிலும் முதலமைச்சர் என்ற சொல் உங்களுக்கு எல்லாம் நகைச்சுவை இருக்கிறது.

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது அதற்கு போராட வேண்டும் சிறை செல்ல வேண்டும் வந்தவுடன் மக்கள் முதலமைச்சர் பதவியை தூக்கி கொடுக்க மாட்டாங்க* *இனி தமிழகத்தில் எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணம் வரவே கூடாது.

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் வரிசையில் ஜோசப் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாறப்போகிறது திமுகவின் ஊது குழலாக தமிழக வெற்றி கழகம் உருவாகிவிட்டது வெகுவிரைவில் திமுகவின் பிராண்ட் அம்பாசிடராக விஜய் மாறுவார் அப்பொழுதுதான் அவருடைய கோட் படம் ரிலீஸ் ஆகும் இல்லையென்றால் விஜய்க்கு பலவித நிர்பந்தங்களை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தும் இப்பொழுதே அத்தகைய நிர்பந்தங்களை ஏற்படுத்த துவங்கி விட்டார்கள் எனவே தான் ஜோசப் விஜயின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. ஜோசப் விஜய் நம்பி தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள ரசிகர்கள் ஏமாந்து விட வேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரே நேரத்தில் பா.ஜ.க.வையும் எதிர்ப்போம், தி.மு.க.வையும் எதிர்ப்போம் என்று விஜய்க்கு ஆதரவு காட்டுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *