அரசியல்

விஜய் நல்ல தலைவரா, நல்ல வழிகாட்டியா ?

எம்.ஜி.ஆர். வழி இருக்கு பாஸ்

சமீபத்தில் நடிகர் விஜய் மாணவ, மாணவியர்களிடம் இரண்டு விஷயங்கள் குறித்து அழுத்தமாகப் பேசினார். போதை பழக்கத்திற்கு ஆளாகிவிட வேண்டாம் என்றால், அதேபோல் நாட்டில் தற்போது நல்ல தலைவர்கள் இல்லை என்று சொன்னார்.

அப்படி என்றால் நடிகர் விஜய் நல்ல தலைவராக இருப்பாரா என்று கேட்டால், அதற்கு அவரிடம் பதில் இல்லை. ஏனென்றால், போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அவரது படங்கள் இருக்கின்றன. அதனால், அவருக்கு போதை பழக்கம் பற்றி பேசுவதற்கே அருகதை கிடையாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவருக்கே அந்த அருகதை இருந்தது. அதனாலே அவர் நல்ல தலைவராக இருந்தார். அதேபோன்று குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்று சொல்வதையும் அவர் கடைப்பிடிப்பதில்லை.

பெற்ற தாய், தந்தையை அவர் கவனிப்பதில்லை. அந்த ஆதங்கத்தை அவர்கள் இருவருமே பொதுவெளியில் பல முறை கூறிவிட்டார்கள். அப்பா மீது வழக்கு போட்டிருக்கிறார். அம்மாவுக்குக் கோயில் கட்டிக் குடுப்பது முக்கியமில்லை, அவர்கள் மனம் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே முக்கியம்.

அதேபோல், குடும்ப வாழ்க்கையிலும் விஜய் சிறப்பாக இல்லை. மனைவியுடன் சண்டை, பிரிந்து வாழ்கிறார். இது அவரது தனிப்பட்ட விஷயம் என்று ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால், ஏராளமான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றால் பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்.

மனைவியுடன் மனஸ்தாபம் என்பது தவறு இல்லை, அதை மூடி மறைப்பதே தவறு. பிரச்னை என்றால் விவாகரத்து வாங்கிவிட்டு அவருக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாம். அவ்வளவு தான்.

இவருக்கு முன்னோடியாக வாழ்ந்து வழி காட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆர். ஆகவே, அதனை கடை பிடிங்க பாஸ். வெற்றி நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *