அரசியல்

54 வயதுக் குழந்தை ராகுலுக்கு ஹேப்பி பர்த் டே

பப்பு இப்போ டாப்பு

ஆளும் பா.ஜ.க. மட்டுமின்றி அத்தனை ஊடகத்தினராலும் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்டவர் ராகுல் காந்தி. இன்று யாராலும் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக மாறி நிற்கிறார்.

நாட்டை ஆளும் பிரதமரை விட மைனாரிட்டி பாஜக ஆட்சியில் ஆட்சியில் நடக்கும் தப்பு தவறுகளை கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ள கேபினட் அமைச்சருக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவி வலிமையானது.

அந்தப் பதவியை தனது கடுமையான உழைப்பால் அசராத தேர்தல் பிரச்சாரத்தால் சாத்தியமாக்கி காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான வெற்றியை தேடித்தந்தவர்.

ஒரு எம்.பி. தொகுதியை பறித்த மோடிக்கு தண்ணி காட்டுவதற்காகவே இரண்டு தொகுதிகளில் நின்றவர். அதாவது வட இந்தியா தென்னிந்தியா என இரண்டு பிரிவு மக்களின் ஆதரவையும் பெற்று இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுக் காட்டியவர்.

ராகுல் கடந்த 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பிறந்தவர். ஆகவே, ராகுல் காந்தி இன்று தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனாகவும், நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பேரனும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, இன்று தனக்கென ஒரு தனி அடையாளம் பெற்றுள்ளார்.

நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோருக்கு பதவிகள் தேடி வந்தன. ஆனால், ராகுல் காந்தி கடுமையாகப் போராடி இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். விரைவில் பிரதமர் பதவியும் தேடி வரும்.

ஏனென்றால் இவர் மக்களோடு மக்களாகப் பழகுகிறார், குழந்தைகளோடு குழந்தைகளாக இருக்கிறார். தொழிலாளர்களோடு தொழிலாளராக இருக்கிறார். அரசியல் பேசும்போது தலைவராக மின்னுகிறார்.

30 லட்சம் வேலைகள், ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண் முன்னேற்றம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், தொழிலாளர்க்கு உத்திரவாதம் போன்றவை ராகுலின் தெளிவான அரசியலுக்கு எடுத்துக்காட்டு. ராகுலுக்கு வெற்றி வந்து சேரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *