பிரபலங்கள்

நாடோடி புரட்சிக்காரன் சே குவாரா

சமூகத்திற்காக போராடுங்கள், போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள், எழுத முடியவில்லை என்றால், பேசுங்கள், பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும் உதவவும் செய்யுங்கள், அதுவும் முடியாது என்றால் உங்கள் பங்கிற்கு போராடுபவர்களை தடுக்கவோ வீழ்த்தவோ வேண்டாம் என்று கூறிய சே குவாராவின் பிறந்த நாள் ஜூன் 14.

ஸ்பார்ட்டகஸ் முதல் பிடல் காஸ்ட்ரோ வரை உள்ள எல்லா புரட்சியாளர்களும் அவரவர் தாய்நாட்டுக்காக, அவரவர் மக்களுக்காக போராடினார்கள். ஆனால் சே அப்படி அல்ல.. பிறந்தது ஒரு நாட்டில் புரட்சி செய்தது ஒரு நாட்டில் மரணமடைந்தது ஒரு நாட்டில். ஒரு நாடோடி புரட்சிக்காரன் சே

தன் கால் பயணிக்கும் அனைத்தையும் தன் நாடாக எண்ணி மக்களுக்காக புரட்சி விதையை தூவி சென்ற புரட்சியாளன் சே. கியூபா நாட்டின் பணத்தில் சே குவாராவின் கையெழுத்து இருந்தது அந்த அளவுக்கான அதிகாரத்தையும் விட்டு விட்டு காங்கோவுக்கு சென்றார் மீண்டும் ஒரு புரட்சிக்கு.

இது போன்ற ஒருவனை வரலாறு கண்டதில்லலை தேச எல்லைகளை தாண்டிய மனிதநேயம் சே குவேரா உடையது. அதனால் தான் இன்றும் சே வாழ்கிறான் ஆதிக்கத்தை எதிர்க்கும் அனைவரிடமும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *