அரசியல்

பிரதமர் மோடியை கலாய்க்கிறாங்கப்பா

வைரலாகும் மகாத்மா காந்தி

காந்தி திரைப்படம் படம் வந்த பின்புதான், காந்தியைப் பற்றி உலகிற்குக் தெரியும் என்று பிரதமர் மோடி “மோடி பேசியிருக்கும் விவகாரம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் காந்தி படம் இருக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காந்தியை தேசப் பிதா என்று அறிந்திருக்கும் நிலையில் இப்படி பேசியிருப்பதை வைத்து அரசியல்வாதிகள் கலாய்த்துத் தள்ளுகுகிறார்கள்.

மோடியின் அறிவை ஒரு ஸ்டாம்பிற்குப் பின்னால் எழுதிவிடலாம் என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘பாரதிராஜா இயக்கிய “ வேதம் புதிது” திரைப்படத்திற்குப் பின்னர் தான், வேதம் என்று ஒன்று இருப்பது பற்றி உலகிற்கு தெரிய வந்தது – இப்படிக்கு பிரதமர் மோடி’ என்று கேலி செய்திருக்கிறார்.

ஆனால், ஒரு வகையில் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். காந்தியை பற்றி உலகில் உள்ள தலைவர்கள் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்பது இப்போது வைரலாகி வருகிறது. இதோ சில தலைவர்கள் பாடிய காந்தியின் புகழ் அஞ்சலி.

நானும் மற்றவர்களும் புரட்சிக்காரர்களாக இருக்கலாம், ஆனால், நாங்கள் காந்தியின் சீடர்கள்.

– ஹோசி மின்

இருண்டுபோய்க் கிடந்த காலத்தின் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருந்து உதவியவர் காந்தி.

– கான் அப்துல் கபார் கான்

வெறும் கோவணம் கட்டிய ஒரு கிழவர், ஆனாலும் அவர் இறந்தபோது மனிதகுலமே அழுதது.

– லூயி ஃபிஷர்

முப்பது கோடி மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டியவர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே அசைத்தவர், 200 ஆண்டுகளின் வலிமையான ஆன்மீக உத்வேகத்தை மானுட அரசியலில் அறிமுகப்படுத்தியவர்.

– ரொமெயின் ரோலண்ட்

வரலாற்றில் மகாத்மா காந்தி புத்தருக்கும் ஏசு கிறிஸ்துவுக்கும் நிகராக மதிக்கப்படுவார்.

– மவுன்ட்பேட்டன்

காந்தியைப் பற்றிய அபிப்பிரயமா? அதைவிட இமயமலை பற்றிய அபிப்ராயத்தை நீங்கள் கேட்கலாம். காந்தியின் கொலை, நல்லவராய் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது.

– பெர்னார்ட் ஷா

அவர் மனித இயல்பை ஆழமாக புரிந்து கொண்ட ஒரு சிறந்த மனிதர். அவரது வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளித்துள்ளது.

– தலாய் லாமா

மனித இயல்பில் அவர் மிகவும் போற்றும் பண்பு என்ன என்று கேட்டதற்கு, மகாத்மா காந்தி, எளிமையாகவும் உடனடியாகவும், ‘தைரியம்’ என்று பதிலளித்தார். ‘அகிம்சை ‘கோழையின் கேடயமாக ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது’ என்றார். இது துணிச்சலானவர்களின் ஆயுதம்.

– ரிச்சர்டு அட்டன்பரோ

மனிதகுலம் முன்னேற வேண்டுமானால் காந்தி தவிர்க்க முடியாதவர். மனிதகுலம் அமைதி மற்றும் நல்லிணக்க உலகத்தை நோக்கி பரிணமிக்கும் பார்வையால் ஈர்க்கப்பட்டு அவர் வாழ்ந்தார், சிந்தித்தார், செயல்பட்டார். அவரைப் புறக்கணிப்பது நமக்கு நாமே ஆபத்தை வரவழைப்பது.

– மார்ட்டின் லூதர் கிங்

காந்தி சிறந்த இந்திய தேசியவாதி, ஆனால் அதே நேரத்தில் அவர் சர்வதேச அந்தஸ்து கொண்ட தலைவராக இருந்தார்.

– ட்ரூமன்

மனித குலத்தின் சிறந்த எதிர்காலத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் மகாத்மா காந்தியின் துயர மரணத்தால் மனதுக்குள் வேதனைப்பட வேண்டும்.

– ஐன்ஸ்டீன்