மனம்

கற்பனை நோய்

ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, தங்களுக்கும் அந்த நோய் இருப்பதாகத் தோன்றுவதே கற்பனை நோய்.

குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் இருந்தால், தங்களுக்கும் அது வரக்கூடும் என்று மிகுந்த விழிப்பும் எச்சரிக்கை உணர்வுடனும் இருப்பார்கள். உணவு தொடங்கி பல்வேறு விஷயங்களிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து எப்போதும் நோய் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். நோய் வந்துவிடும் என்று கவலைப்படுவதை இல்னஸ் ஆன்சைட்டி டிஸார்டர் எனும் ஐ.ஏ.டி. என்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஐ.ஏ.டி. உருவாவதற்கு காரணங்கள் வேறுபடும். பேச்சுவாக்கில் யாரோ ஒரு நபரின் மரணம் பற்றி கேள்விப்படுவது, செய்தித்தாளில் படிப்பது மூலமாகவும் இந்த கவலை உருவாகலாம். வீட்டில் பிறர் நோய் பற்றி தீவிர விவாதம் நடைபெறுவதன் காரணமாகவும் ஐ.ஏ.டி. உருவாகலாம்.

நோய் உடலில் இல்லை என்றாலும் நோய் வந்துவிட்டதாகவே உணர்வார்கள். மேலும், வெளிப்படையாக அறிகுறிகள் தெரிவதாகவும் நம்புவார்கள். இந்த நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். மருத்துவச் சிகிச்சையுடன் ஆறுதல் கொடுப்பதும், உண்மை நிலையைப் புரியவைக்கும் வகையில் ஆலோசகர்கள், உறவினர்கள் தொடர்ந்து பேசி புரிய வைப்பதும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *