மருத்துவர்கள்

பெருகிவரும் குண்டு மாணவர்களுக்குத் தீர்வு

டாக்டர் வீ.புகழேந்தி

சென்னையில் 5ல் 1 மாணவருக்கு(19.50% பேர்) உடல் பருமன் அதிகரித்து தொந்தி ஏற்பட்டும்(Obese),அதை விட சற்று அதிகமாக-21.08% பேர் உடல் எடை அதிகரித்தும்(Overweight) காணப்பட்டது சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5-17 வயது மாணவர்களிடம், ஜூலை 14-17,2022ல் 1,124 மாணவர்களிடையே(584 பேர்-பெண்கள்),(இவர்கள் பல்வேறு சமூக/பொருளாதாரப் பிரிவினைச் சேர்ந்தவர்கள்)செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Body Mass Index(BMI) எடை(கிலோவில்)÷உயரம்(மீட்டர்)^2 வைத்து, அளந்து பார்த்ததில் 23(Adult equivalent)தாண்டியவர்கள்-அதிக எடை கொண்டவர்கள் என்றும்,27(Adult equivalent) தாண்டியவர்கள் தொந்தி உடையவர்களாக (Obese) வரையறுக்கப்பட்டனர்.

மொத்த மாணவர்களில், 667 பேர்(59.3%) வழக்கமான எடை கொண்டவர்களாகவும்,237 பேர்(21.08%) அதிக எடை(Overweight)கொண்டவர்களாகவும், 220 பேர்(19.50%)தொந்தி உடையவர்களாகவும் (Obese) ஆய்வில் கண்டறியப்பட்டனர்.

வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பிருப்பது(Central Obesity-இது தான் நோய் பின்னர் வருவதற்கான முக்கிய அறிகுறியாக உள்ளது.) 334 பேரிடம்(29.7% )இருந்தது (இவர்களில் 13%பேர் வழக்கமான எடைப் பிரிவில் இருந்தனர்.) வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு இருந்தவர்கள் மத்தியில் அதிக எடை+தொந்தி கொண்டவர்கள் 85%பேர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் செய்யப்பட்ட ஆய்வில், 5 வயதை தாண்டியவர்கள் மத்தியில் செய்த ஆய்வில்,0.1%-11.7% பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 2.7%-25.2%பேர் தொந்தி உடையவர்களாகவும் இருந்தனர். ஆனால் தற்போதைய சென்னை ஆய்வில் தான் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேர்வது மாணவர்கள் மத்தியில் அதிகரித்து , அதிகமான பாதிப்பு தற்போதைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. (5ல் 1வருக்கு)

இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படாமல் போனால்,அடுத்த தலைமுறையினர் மத்தியில்(இன்றைய மாணவர்கள் கூட)அதிக எடை+ தொந்தி கொண்டவர்கள் அதிகரித்து,சர்க்கரை நோய்+இதயப் பிரச்சனை மக்களிடையே அதிகரிக்கும் போக்கிற்கு வழிவகுக்கும்.(கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களிடையே அதிக எடை இருக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.)

மாணவர்களிடையே அதிக உடல் எடை+தொந்தி அதிகரிக்கக் காரணங்கள்-

  1. அதிக உடற்பயிற்சியின்மை

2 )கொழுப்பு நிறைந்த துரித உணவுகளின் மீது அதிகம் நாட்டம்

3 )செல்போன்+டி.வி.+கம்ப்யூட்டர் போன்ற பொருட்களின் மீது அதிக கவனம்/பயன்பாடு

4) வீட்டிற்கும்,பள்ளிக்கும் 2,4 சக்கர வாகனங்களில் மட்டும் பயணித்தல்(நடந்து செல்வது குறைந்து வருகிறது.)

5) படிப்பில் தேர்ச்சி என்ற பெயரில் விளையாட்டு + உடற்பயிற்சிக்கு போதிய முக்கியத்துவமின்மை

6) நொறுக்குத்தீனிகளின் மீது அதிகநாட்டம்(அவற்றில் உப்பு+கொழுப்பு மிகையாக உள்ளது.)

போன்றவற்றால் (அருகில் உள்ள இடங்கள்/கடைக்கு செல்லும் போது கூட 2 சக்கர வண்டிகளை பயன்படுத்துதல்(மிதிவண்டியின் பயன்பாடு குறைந்து வருகிறது) )BMI மாணவர்களிடம் அதிகரித்து வருகிறது.

இத்தகைய போக்கு அதிகரித்தால் மாணவர்கள் பெரியவர்களாக வளர்கையில்,அவர்கள் மத்தியில் சர்க்கரைநோய்,இருதயப் பிரச்சனைகள்,மூளை பாதிப்பு,முன்கூட்டிய இறப்பு … போன்ற பிரச்சனைகள் அதிகமாகலாம். ஆக

இப்போதே அதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

1) உடற்பயிற்சி/நடைப் பயிற்சியை மாணவர்கள் மத்தியில் அதிகப்படுத்துதல்

2) அதிக கொழுப்பு உள்ள துரித உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்துதல்

3) செல்போன்,கம்ப்யூட்டர்,டி.வி. நேரத்தை குறைத்தல்,

4) அருகில் உள்ள பள்ளிகளுக்கு நடந்து/மிதிவண்டியில் செல்வதை ஊக்குவித்தல்(சாலையில் அதற்கான பாதைகளை உருவாக்குதல்)

5) பள்ளியில் உடற்பயிற்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தல்

6) வீட்டிற்கு அருகில் உள்ள கடை/இடங்களுக்கு செல்லும் போது நடப்பது/மிதிவண்டியின் பயன்பாட்டை ஊக்குவித்தல்

7) சுவைக்கான உணவு என்றில்லாமல் சத்தான சரிவிகித உணவை உட்கொள்ளுதல் போன்றவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும்.

Drexel பல்கலைக் கழகம்,பிலடெல்பியா,அமெரிக்காவில் செய்த சமீபத்திய ஆய்வில், 2 வயது நிரம்பிய குழந்தைகள் கூட டி.வி.யை அதிக நேரம் பார்ப்பது,குழந்தைகளின் மத்தியில் சுற்றி நடக்கும் உணர்ச்சிகள்/சம்பவங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதில் பெருத்த சிக்கல்கள் நிகழ்வது தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு மற்ற நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைவும்,அதிக தூண்டுதல் மூலமே அவர்களின் கவனத்தை அடையமுடிகிறது போன்ற பிரச்சனைகள் இருப்பதும் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. (இது JAMA Paediatrics ஆய்விதழில் வெளியாகியுள்ளது.)

நல்ல, நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருப்பதை உணர்ந்து அரசும்/மக்களும் இணைந்து மாணவர்களிடம் அதிகரித்து வரும் உடல்பருமன் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண முன்வர வேண்டும்.

தொடர்புக்கு: 8870578769

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *