மருத்துவர்கள்

முதுமையை வெல்லும் நிரந்தரப் பற்கள்

டாக்டர் குணசீலன் ராஜன், ராஜன் பல் மருத்துவமனை, சென்னை.

முதுமைக்கு எல்லோரும் பயப்படுகிறார்கள். ஏனென்றால் விரும்பியதை எல்லாம் கடித்து சாப்பிட முடியாது. பற்கள் இல்லாத காரணத்தால் முகத்தின் வடிவம் மாறிப்போய்விடும். மேலும், பற்கள் இன்றி தெளிவாகப் பேசவும் முடியாது என்பதால், தன்னம்பிக்கை குறைந்து, தனி அறைக்குள் முடங்கிப் போவார்கள்.

இந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக பலரும் பல்செட் உபயோகிக்கிறார்கள். ஆனால், பல் செட் பலருக்கும் தாடையுடன் சரியாகப் பொருந்துவதில்லை. எனவே, எந்த நேரத்தில் கழன்றுவிழுமோ என்ற பதட்டத்துடன் இருப்பார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வு வந்துவிட்டது என்கிறார் டாக்டர் குணசீலன் ராஜன். செனை, ராஜன் பல் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான குணசீலன் ராஜனை சந்தித்துப் பேசினோம்.

  • முதுமையில் பல் இழந்தவர்களுக்கு புதிய மருத்துவத் தீர்வு வந்திருக்கிறது என்பது உண்மையா..?
  • வயது முதிர்வினால் மட்டுமல்ல… பலர் விபத்தினால் பற்கள் இழக்கிறார்கள். சிலருக்கு பிறவிக் குறைபாடு மற்றும் நோயின் பாதிப்புகள் காரணமாக பற்களை இழக்கிறார்கள். இவர்களுக்கு பல் செட் நிரந்தரத் தீர்வாக இருப்பதில்லை. இப்போது ஸைகோமா இம்ப்ளான்ட் சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் குறைந்த கால அவகாசத்தில் நிரந்தரப் பற்கள் பொருத்திவிட முடியும். மேலும், செயற்கை பற்கள் 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன் தரக்கூடியதாக இருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஆகவே, இப்போது எல்லா வயதினருக்கும் புதிய ஸைகோமா இம்ப்ளான்ட் சிகிச்சையே உலகம் முழுக்க செய்யப்படுகிறது.

  • இம்ப்ளான்ட் சிகிச்சை மூலம் பற்கள் பொருத்துவது ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கிறதுதானே..?
  • முந்தைய சிகிச்சை முறையில், பல்செட் இம்ப்ளான்ட் செய்வதற்கு மேல் தாடையில் எட்டு இம்ப்ளான்ட், கீழ்த்தாடையில் ஆறு இம்ப்ளான்ட் செய்யவேண்டிய அவசியம் இருந்தது. அதேநேரம், தாடை எலும்பு தேய்ந்திருந்தால், இடுப்பு எலும்பில் ஒரு பகுதி எடுத்து தாடையில் பொருத்தி இம்ப்ளான்ட் செய்ய வேண்டி இருந்தது. இந்த சிகிச்சை நடைமுறை எல்லாம் முழுமையாக முடிவதற்கு ஓர் ஆண்டுக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருக்கும். இதற்கு அதிக செலவும் ஆகும். இந்தக் குறைகளை முழுமையாக நீக்கிய அதிநவீன ஸைகோமா இம்ப்ளான்ட் சிகிச்சையில், மேல் தாடையில் நான்கு இம்ப்ளான்ட் மட்டுமே செய்து பல்செட் பொருத்தப்படுகிறது. கன்னத்து எலும்பில் இம்ப்ளான்ட் செய்யப்படுவதால், தாடை எலும்பு தேய்ந்திருந்தாலும் பிரச்னையில்லை. கீழ்த்தாடையில் ஆல் ஆன் ஃபோர் சிகிச்சை முறையில் நான்கே இம்ப்ளான்ட் மூலம் பல்செட் பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சையின் வெற்றிவிகிதம் 98.5 சதவிகிதமாக இருக்கிறது. இந்த சிகிச்சையினால் நிரந்தரப் பற்கள் பெற்றவர்கள், இயற்கையான பற்களுடன் வாழ்வது போலவே, வாழ்நாள் முழுவதும் உணவுகளை மென்று சாப்பிடவும், நிரந்தரமான முகப்பொலிவுடனும் திகழ முடியும்.

பல் செட் பயன்படுத்துவதில் என்ன பிரச்னை..?  

  • முதுமை, ஈறு நோய்கள், விபத்து, கருப்பு பூஞ்சை, பிறவிக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் பற்களையும் தாடை எலும்பையும் இழப்பவர்களுக்கு, தற்காலிகத் தீர்வாக பல்செட் பொருத்தப்படுகிறது. ஆனால், பலருக்கும் பல்செட் மிகச்சரியாக தாடையில் பொருந்துவதில்லை. அடிக்கடி கழன்று விழுந்துவிடும். பல் செட்டை வாய்க்குள் திணித்திருப்பது, அந்நிய பொருளை வாயினுள் திணித்திருப்பது போன்ற அவஸ்தையாகவே இருக்கும். மேலும், பல்செட் போட்டுக்கொண்டாலும், விரும்பிய உணவுகளை எல்லாம் கடித்து சாப்பிட முடியாது. எந்த நேரமும் பல்செட் கழன்றுவிழும் என்ற பதட்டம் ஓடிக்கொண்டே இருப்பதால், யாருடனும் இயல்பாகப் பேசவும் வாய்விட்டு சிரிக்கவும் முடியாது. பல்செட் கழன்றுவிடாமல் தடுப்பதற்கு, அதனை வாய்க்குள் அழுத்திப் பிடிப்பதால், முகத்தசைகள் கடினமாகிறது. இதனால் முணுமுணுப்பாக அல்லது பற்களை கடித்தபடி குழறுபடியாகத்தான் பேச முடியும். எனவே, எப்போதும் கூட்டத்துடன் சேராமல் தனித்தே நிற்பட்துடன் தன்னம்பிக்கை குறைந்து வருந்துவார்கள்.

  • இப்போது அதிநவீன ஸைகோமா ஆல் ஆன் 4 சிகிச்சை மூலம் நிரந்தரப் பற்கள் பொருத்தப்படுவதால், அவை கீழே விழுந்துவிடும் என்ற அச்சம் இருக்காது. மேலும், இயற்கை பற்களைப் போலவே அளவெடுத்து பொருத்தப்படுவதால், அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் திகழ முடியும்
  • தாடை மற்றும் ஈறுகள் மீது தொடர்ந்து பல்செட் மாட்டுவதால் பலருக்கும் தாடை எலும்பு தேய்கிறது. இதனால் பல்செட் போதிய பிடிமானமின்றி நகரவும், விலகவும் செய்கிறது. எனவே, அவ்வப்போது புதிய பல்செட் மாட்ட வேண்டிய நிலை உருவாகும். மேலும் நரம்புகள் வெளியே தெரியவும், ஈறுகளில் அழற்சி ஏற்படவும் பல்செட் காரணமாகிறது. மேலும், பல்செட் ஒட்டுவதற்கான பசையினால் வாயில் ஏற்படும் கொழகொழப்புத் தன்மையுடன் நாள் முழுவதும் அவஸ்தைப்படும் அவசியமும் இம்ப்ளான்ட் பற்களில் கிடையாது. ஆனால், இம்ப்ளான்ட் செயற்கை பற்கள் தாடை எலும்பு மீது உறுதியாக பொருத்தப்படுவதால், இயற்கை பற்கள் போன்ற வலிமையுடன் திகழும்.

  • புதிய இம்ப்ளான்ட் சிகிச்சையின் பலமும் பக்கவிளைவுகளும் என்ன..?
  • பொதுவாக பற்களை இழந்தவர்களுக்கு தாடை எலும்புகள் சுருங்கத் தொடங்கும். இதனால்தான் வயதான பலருக்கும் தாடை தனியே தொங்குவது, வெளியே நீட்டிக்கொண்டு இருப்பது போன்ற பிரச்னைகள் உருவாகிறது. நிரந்தர செயற்கை பற்கள் பொருத்தும்போது, தாடை எலும்பு சுருங்குவது குறைகிறது அல்லது முற்றிலும் நின்றுபோகிறது. இம்ப்ளான்ட் மூலம் தாடை எலும்பு பாதுகாக்கப்படுவதால் இயற்கை பற்கள் போன்ற உணர்வு கிடைக்கிறது. பற்களுக்கும், உடலுக்கும் எந்த வகையிலும் இடையூறு செய்யாத டைட்டானியம் மெட்டீரியல் மூலமே இம்ப்ளான்ட் செய்யப்படுகிறது என்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.
  • நிரந்தர செயற்கை பற்களால் முறுக்கு, எலும்பு போன்றவற்றை கடிக்க முடியுமா..?
  • இயற்கையான பற்களுடன் ஒருவர் எதையெல்லாம் சாப்பிட முடியுமோ, அவற்றை எல்லாமே செயற்கை பற்கள் மூலம் சாப்பிட முடியும். பொதுவாக முதியவர்களுக்கு தாடை எலும்பு சுருங்குவதன் காரணமாக மென்று தின்னும் திறன் குறைவதுடன், சில பொருட்களை கடித்து சாப்பிட முடியாத நிலை உண்டாகிறது. மேல் தாடையில் பல்செட்டுக்காக போடப்படும் தகடு வாயின் மேற்புறத்தை அதிகம் அடைத்துக்கொள்வதால் சுவை அறியும் திறனும் குறைகிறது. ஆனால் இம்ப்ளான்ட் பற்களுக்காக மேல்தாடையில் தகடு பொருத்தப்படுவதில்லை என்பதால், உணவின் சுவையை முழுமையாக அனுபவித்து சாப்பிட முடியும்.
  • உடலில் வேறு நோய் இருப்பவர்களும் நிரந்தரப் பற்கள் பெற முடியுமா..?
  • நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு அவற்றை கட்டுப்படுத்திய பிறகு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, எந்த ஒரு நோய்க்கு ஆட்பட்டிருந்தாலும், அவர்கள் நிரந்தப் பற்கள் பெறுவதற்கு தடை இல்லை. ஒரு சிலருக்கு பற்கள் மிகவும் பலவீனமாக இருக்கும். இள வயதிலேயே விழும். அவர்களும் இந்த சிகிச்சை மூலம் பலமான பற்களை பெற முடியும். செயற்கை பற்கள் பொருத்தப்படுகிறது என்றாலும் பார்வைக்கும், உணர்வுக்கும், செயலுக்கும் இயற்கை பற்களைப் போன்றே இருக்கும்.

  • பழைய இம்ப்ளான்ட் சிகிச்சைக்கு ஓர் ஆண்டுக்கும் மேல் ஆகும் எனும் நிலையில், புதிய சிகிச்சையின் கால அளவு என்ன..? அறுவை சிகிச்சை செய்யப்படுமா..?
  • ஸைகோமா இம்ப்ளான்ட் சிகிச்சையை பல் மருத்துவமனையில் குறிப்பிட்ட பாகங்களுக்கு மட்டும் மயக்கமருந்து கொடுத்து செய்துவிட முடியும். ஒருசிலருக்கு மட்டும் முழுமையான மயக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படும். முழு சிகிச்சையையும் 3 முதல் 4 நாட்களில் முடிந்துவிடும். அதன் பிறகு அடிக்கடி மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. வருடாந்திர பரிசோதனை மட்டுமே போதுமானது. இயற்கை தோற்றத்தில் பற்கள் இருப்பதால் முக வடிவம், பேச்சுக்குளறுபடி சரியாகிவிடும். முதுமையில் வரும் ஈறு நோய்களும் இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • நிரந்தரப் பற்கள் மூலம் முதுமையை வெல்ல முடியும் என்பது நல்ல செய்திதானே…
  • தொடர்புக்கு : 044 40105050

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *