பணம்

பணம் மீதுஎவ்வளவுநம்பிக்கை வைக்கலாம்..?

பணம் தரும் மரியாதை

பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் மீது வைக்கும் நம்பிக்கயைவிட, பணத்தின் மீது அதிக நம்பிக்கையை மக்கள் வைத்திருக்கிறார்கள். அதனால்தான், பணத்தை ரகசியமாக பூட்டி வைத்திருக்கிறார்கள்.

திடீரென பணம் செல்லுபடியாகாது என்று அரசு அறிவித்துவிட்டால், அத்தனை பணமும், வெறும் காகிதமாகிவிடும். ஆனாலும், மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கையைவிட பணத்தின் மீதுதான் மக்களுக்கு அதிக நம்பிக்கை. அது தவறும் அல்ல. ஏனென்றால், வெளியூர் செல்லும்போது அங்கே நீ யாருக்கும் தெரியாத ஒரு மனிதனாக இருந்தாலும், பணம் உன்னுடைய மதிப்பைக் கூட்டிக் காட்டிவிடும். நீ விரும்பியதை சாதிக்கவும் முடியும். திடீரென வேலை இழந்துவிட்ட ஒரு மனிதனுக்கு எந்த உறவும் தொடர்ந்து தண்டச் சோறு போடவும் மாட்டார்கள்.

பணத்துக்கு மரியாதை

கடைக்குச் சென்றாலும், கோயிலுக்குச் சென்றாலும், மருத்துவமனைக்குச் சென்றாலும் பணக்காரனுக்குத்தான் மரியாதை. அதனால்தான் பணம் சம்பாதிப்பதிலும், அதனை சேமிப்பதற்கும் தன் வாழ் முழுவதையும் செலவழிக்கிறான்.

பணத்தின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது. அதேநேரம், பணத்தைக் கொண்டு அன்பையும், அரவணைப்பையும் வாங்குவதற்கு முயற்சிக்க வேண்டும். பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் பணத்தைத் தாண்டியும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்புதான், உன் வாழ்க்கைக்கு துணையாக இருக்கும்.

நம்பிக்கை முக்கியம்

ஒரு கட்டத்தில் பணத்தின் மீது உனக்கிருக்கும் நம்பிக்கையை, உறவுக்கு மாற்றத் தெரிய வேண்டும். ஆம், வெறுமனே பணத்தை மட்டும் வைத்து வாழ முடியாது. அதேநேரம், வெறும் உறவுகளைக் கொண்டும் வயதான காலத்தைக் கழிக்க முடியாது.

அதனால், ஒருபோதும் பணத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிடாதே..!

பணம் சேமிக்கவே இல்லையா..? பரவாயில்லை, வாழ்க்கை மீது நம்பிக்கை வை. ஏதாவது நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *