பணம்

பணம் நிறைய வைத்திருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்..?

காயத்ரி பேரழகிஅவளது அப்பா புகழ்பெற்ற வணிகர். அதனால் அவள் வீட்டில் செல்வத்துக்கு பஞ்சமில்லை. அவள் ஆசைப்பட்ட எல்லாமும் கிடைத்தது. கல்லூரிக்குச் செல்வதாக இருந்தாலும், காபிஷாப் என்றாலும் காரில்தான் செல்வாள். அவளுக்கென பிரத்யேகமான விலை உயர்ந்த காரும், டிரைவரும் இருந்ததால் தோழிகளுடன் நேரம் காலம் பார்க்காமல் கும்மாளம் போடுவாள்.  மேல்தட்டு வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்பதால்,  அவளது பெற்றோர்  காயத்ரியின் நடவடிக்கையை கண்டுகொள்ளவோ, கண்டிக்கவோ இல்லை. எம்.பி..,முடித்து அப்பாவின் வணிகத்தை இன்னமும் மேம்படுத்த ஆசைப்பட்டாள்.  படிப்பிலும் டென்னிஸ் விளையாட்டிலும் கெட்டிக்காரி.

இப்படிப்பட்ட காயத்ரி, திடீரென ஒரு நாள் கார் டிரைவர் நந்தகோபாலுடன் ஓடிப்போய் விட்டாள்அவன் ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்பவன். ஏழை வீட்டிற்கே உரித்தான சாபம்போல்அவனுக்கு இரண்டு தங்கைகள். அவர்கள் இருவரும்  கல்யாணத்துக்குத் தயாராக இருந்தனர். இதையெல்லாம் நன்கு அறிந்தபிறகும், ஒரு பொட்டு தங்கம், பணம், புடவை எதுவுமே எடுத்துக்கொள்ளாமல் நந்துவின் வீட்டிற்குள் காயத்ரி அடியெடுத்து வைத்தாள்.  எனக்கு பீட்ஸா, பர்கர் எல்லாம் வேண்டாம், ரேசன் அரிசி சாதம் போதும் என்று சொன்னாள். என் தந்தையிடம் இருக்கும் பணம், சொத்து எதுவுமே எனக்கு வேண்டாம், நந்துவின் அன்பு மட்டும் போதும் என்று உறுதியுடன் சொன்னாள்.

காயத்ரி நந்துவுடன் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தாளா என்பது இங்கு  தேவையில்லாத விஷயம். ஏனென்றால் செல்வத்தில் திளைத்த காயத்ரி ஏழை வீட்டுக்கு இடம் பெயர்ந்ததுதான் குறிப்பெடுக்க வேண்டிய விஷயம். இதுபோன்ற ஆயிரத்தெட்டு கதைகளை வாழ்க்கையில் பார்த்திருப்போம், படித்திருப்போம்.  வசதியான வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்த காயத்ரி போன்றவர்கள், பணத்தை மதிக்காமல் ஓடிப்போவதற்கு என்ன காரணம்?

கெளதம சித்தார்த்தருக்கும் காயத்ரிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. சித்தார்த்தன் வாழ்க்கையில் துன்பம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.  அரச மாளிகை, சொல்வதை செய்யும் பணியாட்கள்,  சுகபோக ராஜமரியாதை, மகிழ்ச்சியூட்டும் கலைஞர்கள் , கண்ணுக்கு அழகான மனைவி, மழலை பேசும் பிள்ளை என்று சொகுசிலும் சொகுசாக வாழ்க்கை நடத்தினார் இளவரசர் சித்தார்த்தன். அவர்தான்,  திடீரென ஒரு நாள் அரச உடைகளை, ஆபரணங்களைக் களைந்துவிட்டு, சுகபோகங்களைத் துறந்து, மனைவி, பிள்ளையை மறந்து  சந்நியாசி கோலத்துடன் திருவோடு ஏந்தும் பிச்சைக்காரனாக வலம்வரத் தொடங்கினார்.

இந்த உலக மக்கள் அத்தனை பேரும் சொகுசு வாழ்க்கைக்கு ஏங்கும்போது, கெளதம புத்தர் மட்டும் ஏன் அதனை உதறிவிட்டு பிச்சை எடுப்பதை ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால் கார், பங்களா, வேலைக்காரர்கள்,  நிறைய பணம் சம்பாதிப்பது வாழ்க்கைக்கு போதாதா?

ஒரு பக்கம் மக்கள் பணம் சம்பாதிக்க நாயாய், பேயாய் அலைகிறார்கள். பணத்துக்காக சில இளைஞர்கள் கூலிப்படை, தற்கொலைப்படையில் சேர்ந்து , தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள். கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும் என்பதற்காக வெளிநாட்டிற்குப் போய் கொத்தடிமையாக வேலை செய்து, தங்கள் இளமையைத் தொலைக்கிறார்கள். பணத்துக்காக சிலர் உயிரினும் மேலான கற்பை விலை பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் பணம் இருப்பவர்கள் நிம்மதி தேடி கோயில்குளம்ஆசிரமம் என்று அலைகிறார்கள். இதற்கு காரணம் என்ன?

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறைவனிடம் பெரும்பாலும் இரண்டே இரண்டு வேண்டுகோள்கள் வைக்கிறார்கள். ஒன்று நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்இரண்டாவது நிறைய பணம் வேண்டும். பணம் இருந்தால் ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில் வாங்கிக்கொள்ள முடியும் என்பதால், நேரடியாக பணம் கேட்பவர்களே அதிகம்ஆனால் ரிசர்வ் வங்கியின் சாவி கடவுள் கையில் இல்லை என்பதால்யாருக்கும் அவர் பணத்தை அள்ளிக்கொடுப்பது இல்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் மக்கள் காலம்காலமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி, பணம் என்பது என்ன?

அது வெற்றுக் காகிதம். ஏனென்றால் உன்னுடைய பணத்தை ஒரு கழுதையிடம் கொடுத்துப் பார். பணம் என்ற சங்கோஜம் இல்லாமல் அசைபோட்டுத் தின்னும்.. வெளிநாட்டுக்காரனுக்கு உன் பணம் வினோதமாக இருக்கும். சிறு பிள்ளையிடம் கொடுத்துப்பார்விளையாட்டுப் பொருளாக நினைக்கும். அதனால் பணம் கடவுளுக்கு நிகரானது என்ற எண்ணத்தை முதலில் கிழித்துப்போட வேண்டும்.

வாழ்க்கை சக்கரத்தை சுலபமாக நகர்த்தும் சாதனம் என்ற அளவுக்கு மட்டும் பணத்தை மதிப்பதே போதும். ஏனென்றால் பணம் கண்டுபிடிக்கப்படும் முன்பும் மனிதர்கள் வாழ்ந்தார்கள். பணம் இல்லையென்றாலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். பனி மலையில் வாழும் எஸ்கிமோக்களுக்கும் பாலைவனங்களில் வாழும் மக்களுக்கும் தேவை உணவுப் பொருட்களே தவிர பணம்அல்ல. தாகத்தில் தவிக்கும் ஒருத்தனுக்கு அவசரத்தேவை தண்ணீர்தான், பணம் கொடுத்து அவன் தாகம் தீர்க்க முடியாது. விளைபொருளும் தானியங்களும் அபரிமிதமாக விளைந்திருக்கும் இடங்களில் பணத்துக்கு மிகப்பெரும் மதிப்பு கிடையாது என்பதுதான்நிஜம்.

ஆனால்,  இன்றைய உலகம் பணம் எனும் பாசக்கயிற்றால் கட்டப்பட்டு இருப்பது நிஜம். அதனால் அனைவருக்கும் பணம் தேவை. ஆனால் எந்த அளவுக்குத் தேவை என்ற தெளிவும், உறுதியும்தான் மனிதனுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. ஒரு மூட்டை அரிசி வீட்டில் இருந்தாலும்  ஒரு தட்டு உணவுதான் வயிற்றுக்குத் தேவை.  ஏழு அறைகளுடன் வீடு கட்டினாலும் ஏதேனும் ஒரு படுக்கையில்தான் தூங்க முடியும். நான்கு கார் இருந்தாலும் ஒன்றில்தான் பயணம் செல்ல முடியும். அதனால் எந்த அளவுக்கு செல்வம் வேண்டும் என்பதை முடிவு செய்வதில்தான் சந்தோஷமும் வெற்றியும் இருக்கிறது.  பணத்துக்குப் பின்னே மட்டும் ஓடிக்கொண்டு இருந்தால், காயத்ரி போன்ற பெண்கள் பணம் இல்லாத இடம் நோக்கி பாய்வதை தடுக்கமுடியாது.

அப்படியென்றால் நிறைய பணம் ஆபத்தா?

நிச்சயம் இல்லை. நிறைய பணம் சம்பாதிப்பது தவறுஅல்லபணத்தைவிட உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியம் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  நிறைய பணம் இருப்பவர்களுக்கு நிறைய எச்சரிக்கை உணர்வு தேவை. உன் பணத்தை அபகரிக்க நிறைய போட்டி இருக்கும்.  பணத்தை கொடுத்தால் கர்ணன் என்றும் மறுத்தால் கஞ்சன் என்றும் சொல்வார்கள். உன் வேலைக்காரர்களை நம்ப முடியாது. அவர்கள் பணத்துக்கு வேலை செய்பவர்களே தவிர, உனக்கு அல்ல. நாளை வேறு இடத்தில் கூடுதல் பணம் சம்பளமாக கிடைக்கும் என்றால் தயங்காமல் உன்னைவிட்டு விலகுவார்கள். எல்லாவற்றையும் பணத்தால் வாங்க முடியும் என்று நினைப்பாய்ஆனால் ஆரோக்கியம், அன்பு, மகிழ்ச்சியை பணத்தால் வாங்கவே முடியாது. அதனால் வாழ்க்கை சுலபமாக நகர்வதற்குத் தேவையான பணம் வைத்திருப்பதேபுத்திசாலித்தனம்.

அப்படியென்றால்  எவ்வளவு பணம் வேண்டும்?

அது, அவரவர் சம்பாதிக்கும் திறமையையும்,  அதனை சிக்கனமாக செலவழிக்கும் குணத்தையும் பொருத்ததுவயிறு நிரம்பியதும் போதும் என்று சொல்வதுபோல், தேவைகள் பூர்த்தியானதும் பணம் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் நிம்மதி நிலைக்கும்.  எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்ற எண்ணத்தில் சேமித்துக்கொண்டே இருந்தால், பணம் உன்னிடம் இருந்து விலகி ஓடிக்கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் உனக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று ஒரு கணக்கு போடலாம். ஆனால், நிச்சயம் அந்தக் கணிப்பும்கணக்கும் சரிவராது.  அதனால் இன்றைய வாழ்வுக்கு பணம் தேடுஇன்னொரு உண்மை தெரியுமா? தேடும்போது விலகுவதும் தேடுவதை நிறுத்தினால் நெருங்குவதும்தான் பணத்தின் குணம்.

அதனால் பணத்தின் மீதான ஆசையை தூக்கி எறிந்துவிட்டு உன் வேலையை செய், உன் பின்னே பணம் அடிமைபோல் வந்துகொண்டே  இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *