மனம்

மரணம் என்பது இதுதான்..!

70 வயதிலும் கொய்யாக்காய் விற்று பிழைத்துவந்தாள் ராசாத்தி. அன்று ஏனோ காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கிக்கிடந்தனமனமெல்லாம் வருத்தத்துடன் கொய்யாக் கூடையை கீழே இறக்கியவள், ‘ஆண்டவனுக்கு கண்ணு அவிஞ்சே போச்சுஇந்த வயசில் என்னை பாடாய்படுத்துறான்ஒரேயடியா என்னை கூப்பிட்டுப் போகமாட்றானே…’ என்று வாய்விட்டுப் புலம்பினாள்.

எமதர்மனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கவே உடனே ஓடிவந்தான்.

ராசாத்திவா எமலோகம் போகலாம். இனிமே நீ கொய்யாக்கா வித்து அவதிப்படவேண்டாம்…’ என்றபடி கையைப் பிடிச்சான். அவ்வளவுதான், ராசாத்திக்கு மூக்குக்குமேல் கோபம் வந்தது.

‘கூடையைத் தூக்கி தலையில வைக்க ஆளில்லைன்னு கூப்பிட்டா, நீ சாகச் கூப்பிடுறேன்’னு படக்கென்று தலையைத் திருப்பினாள்.  தலையை படக்கென்று திருப்பிய ராசாத்திக்கு நரம்பு எசகுபிசகாக சிக்கிக்கொள்ள, செத்தே போனாள். 

ராசாத்தி செத்துப்போனதுக்கு யாருமே அழவில்லை. இத்தனைக்கும் இரண்டு பெண் பிள்ளைகளையும் உள்ளூரில் கட்டிக்கொடுத்திருந்தாள்அவர்கள் பிள்ளை குட்டியுடன் வந்து அரட்டை அடித்தார்களே தவிர, அழவில்லை. கடைசி பையன் டவுனில் இருந்து வரட்டும் என்று ராசாத்தியை ஐஸ் பெட்டியில் வைத்து காத்துக்கிடந்தார்கள். தனியாகிடந்து சீரிழியறதைவிட செத்துப்போனது நல்லதுன்னு பேசிக்கிட்டாங்க.

அதே நாளில்தான் புண்ணியகோடியும் செத்துப்போனான். அவனுக்கு வயசு 41. திடீர் நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் செலவழித்தும் செத்தே போனான். அவன் மனைவி, திருமணமாகாத மூத்த பெண், அடுத்தடுத்த இரண்டு பையன்கள் என குடும்பமே கதறி அழுதது. புண்ணியகோடியை தெரிந்தவர்களும் அறிந்தவர்களும் கண்ணீர் சிந்தினார்கள். ‘’கடவுளுக்கு கண்ணே இல்லை, இதுவெல்லாம் போகவேண்டிய வயசா…’’ என்று பேசிக்கொண்டார்கள்.

இனி விஷயத்துக்குப் போகலாம்.

இரண்டு வீட்டில் மரணம் நிகழ்ந்திருக்கிறது. ராசாத்தியின் வீடு மரணத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க, புண்ணியகோடி வீட்டில் மட்டும் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.  மனிதன் ஏன் எல்லா மரணங்களுக்கும் அழுவதில்லை?

தன்னைப் பாதிக்காத மரணத்தை மனிதன் கண்டுகொள்வதில்லை, இன்னும் சொல்லப்போனால் பிறர் மரணத்தை ரசிக்கிறான் என்பதுதான் நிஜம்.  விதவிதமான மரணம் குறித்து நாளிதழில் ஆர்வமாகப் படிக்கிறான்எந்தடி.வியில் நிறைய பிணம் காட்டுகிறார்கள், எதில் நிறைய ரத்தம் காட்டுகிறார்கள் என்று தேடித்தேடி ரசிக்கிறான்இந்த மரணங்களுக்கு எந்த மனிதனும் அழுவதில்லைஏனென்றால் அந்த மரணங்களால் அவனுக்கு நேரடி பாதிப்பு இல்லை.

ராசாத்தியால் இனி யாருக்கும் பயன் இல்லை என்பதாலே அவள் மரணத்தை, வாரிசுகள் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை, அழவில்லை. . இன்னும் சொல்லப்போனால் ஒரு சுமை ஒழிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். பெற்ற தாய், தந்தை மரணம் அடைந்தாலும், அவர்களால் பயனில்லை என்றால் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிஜம்..

ஆனால் புண்ணியகோடி நிலை அப்படியில்லை. மனைவிக்கு இளம் வயது. இனி தனியாக வாழவேண்டிய பயம் மிரட்டுகிறது. குடும்பச்செலவுக்கு பணம் தர ஆள் இல்லை என்று அழுகிறாள்.  படிப்புச்செலவு, எதிர்கால பயத்தால் பிள்ளைகள் கலங்கி அழுகிறார்கள்எங்கள் வாழ்வு இடியாப்ப சுழலில் சிக்கிக்கொண்டது,  யாராவது ஆதரவு கொடுங்கள், காப்பாற்ற வாருங்கள் என்ற அழைப்புதான் அவர்களது அழுகையின் அடிநாதம்.

அப்படியென்றால் அக்கம்பக்கத்தினரும் உண்மையாக புண்ணியகோடிக்காக அழவில்லையா?

இல்லை என்பதுதான் உண்மை. அவனால் நேசிக்கப்பட்டவர்கள், அவனை நேசித்தவர்கள் அந்த அன்பு இனி கிடைக்காது என்ற வெறுமையால் அழுதார்கள்.  இதுபோன்ற அற்பாயுள் மரணம் தங்களுக்கும் நேருமோ என்ற அச்சத்தில் அழுதார்கள்.

இப்படி சொல்வதால் மனைவி, மக்களின் உண்மையான பாசத்தை  கொச்சைப்படுத்துவதாக ஆதங்கப்படுபவர்கள், இன்னும் சில தினங்களில் புண்ணியகோடி வீட்டு மனிதர்கள் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களை உற்றுக் கவனித்தால் உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

என் புருஷனே போயிட்டார், இனிமே நான் எதுக்கு வாழணும்’ என்று கண்கள் சிவக்க அழுதுகொண்டிருக்கும் இதே மனைவி, ‘அவர் போனாலும் குழந்தைக்காக நான் வாழணுமே’   என்று வசனம் பேசுவாள்இவள் செத்துப்போனாலும் பிள்ளைகள் எப்படியாவது வளரும் என்ற சூட்சுமம் புரிந்தால்கூட செத்துப்போக மாட்டாள். ஏனென்றால் உயிர் வாழ்வதுதான் அத்தனை உயிரினங்களும் படைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்.

அப்பா செத்துட்டார், இனிமே எந்த வெட்டிச்செலவும் செய்யக்கூடாது என்று மனதார நினைக்கும் மகள், அடுத்த மாதம், ‘ஒரே ஒரு லிப்ஸ்டிக் வாங்க முடியாதா?’ என்று அம்மாவுடன் சண்டைபோடுவாள்அதுதான் மனித இயல்பு. ஏதேனும் ஒரு புள்ளியில் அந்தக் குடும்பச்சக்கரம் சுழலத் தொடங்கிவிடும். ஏனென்றால் மரணம் முடிவாகவும், தீர்வாகவும் இருப்பதில்லை.

அதனால் மனிதன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த உயிரினமும் மரணத்தை விரும்புவது இல்லைஅதேபோல் தனக்கு இப்போதைக்கு மரணம் வராது என்றே ஒவ்வொருவரும் உறுதியுடன் நம்புகிறார்கள். உயிருக்கு ஆபத்து வந்தால் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள். ஆனால் எந்தக் கடவுளாலும் எந்த மதத்தாலும் மரணத்தை நிறுத்தமுடியாதுஆம், இந்த உலகில் இதுவரை எந்த மனிதனும் சிரஞ்சீவியாக வாழ்ந்ததே இல்லை.

அப்படியென்றால் மரணம் என்றால் என்ன?

அது வாழ்க்கையின் முடிவல்ல, இன்னொரு ஆரம்பம். அதன் சூட்சுமம் மனித மூளைக்கு அப்பாற்பட்டது..  மரத்தின் இலை கீழேவிழுந்து மட்கியதும் மரத்துக்கு உரமாகி மீண்டும் இலையாக மாறுவதைப்போல், இந்த மரணத்துக்கும் வாழ்க்கை உண்டு. அதனால் மரணத்தைக் கண்டு அச்சம் வேண்டாம். எந்தஒரு திருப்பத்திலும், நிமிடத்திலும் மரணம் காத்திருக்கலாம் அதனால் மரணத்தை தவிர்க்கவோ, எதிர்க்கவோ முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் மரணத்தைத் தடுக்க முடியாது. அதனால் மரணத்தை இயல்பாக எதிர்கொண்டு மனமார வரவேற்க வேண்டும்.

மரணத்தை எப்படி வரவேற்க முடியும்?

பூக்களை ரசிப்பதுபோல் மரணத்தை ரசிக்க வேண்டும் மணமும் உயிர்ப்பும் உள்ள வரை மலர்களைக் கொண்டாடுவதுண்டு. அதன்பிறகு குப்பைத்தொட்டிக்குப் போய்விடும். அப்படித்தான் உயிர் இருக்கும் வரை ரசித்து வாழவேண்டும். உயிருக்கு இடைஞ்சல் வரும்போது ஆனந்தமாக மரணிக்க முன்வர வேண்டும்.

கடமை முடிவடையும் வரை மரணத்தை தள்ளிப்போட ஆசைப்படலாம். அது, அலை நின்றதும் மீன் பிடிப்பதற்கு சமம். தனி மனித கடமைக்கும் மரணத்துக்கும் தொடர்பு கிடையாது. ஒருவர் இல்லையென்றால் இந்த உலகில் எதுவும் நிற்பதில்லை. ஏதாவது நடக்கும். அதனால் வீட்டுக்கு வரும் உயர் அதிகாரி அல்லது பிடித்தமான நண்பர் போன்று மரணத்தை வரவேற்கும் மனநிலை வேண்டும். தெருவில் விளையாடும் குழந்தை, தூரத்தில் அம்மாவைப் பார்த்ததும் ஓடிவந்து ஆசையாக கட்டிப்பிடிக்குமே, அப்படி மரணத்தை தழுவிக்கொள்ள வேண்டும். மரணத்தை ரசிக்கும் மனநிலை வந்துவிட்டால், சகிப்புத்தன்மையும் ஆனந்தமும் மனதில் பொங்கும், தங்கும்.

மரணத்தை ரசிப்பது எப்படி?

இறைச்சிக் கடைகளில் கோழிகளை ஒரே இடத்தில் அடைத்திருப்பார்கள். அந்தக் கோழிகளின் கண் எதிரில்தான் பிறகோழிகள் வெட்டப்படும். அதைக்கண்டு மற்ற கோழிகள் கத்தி, கூப்பாடு போவதில்லை. மரணத்தை வேடிக்கை பார்க்கும். வெட்டப்பட்ட கோழியின் உடல் துண்டு  வீசப்பட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் உணவாக கொத்தித் தின்னும். மரணம் வரும்வரையிலும் வாழ்க்கையை வேடிக்கை பார்க்கும் கோழியைப்போல் நீயும் வாழு. அப்போதுதான் வாழ்க்கையை ரசிக்க முடியும். ஆனந்தமாக வாழ ஆசைப்படும் ஒவ்வொரு நபரும் முதலில் மரணத்தை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்னமும் மரணம் குறித்து பேசுவதற்கு ஆயிரத்தெட்டு விஷயங்கள் இருக்கின்றன.  அவற்றை நாம் நிதானமாக பின்னர் அலசலாம். நமக்குத்தான் மரணம் கிடையாதே.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *